திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு :

பதிவு:2022-05-19 12:20:17



திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு :

திருவள்ளூர் மாவட்டத்தில் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு ஆய்வு :

திருவள்ளூர் மே 19 : திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

முதலாவதாக திருவள்ளூர் வட்டம், பேரம்பாக்கம் கிராமத்தில், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பாக தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 50 சதவிகிதம் மானியத்தில் 1 ஹெக்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள புதிய மீன் பண்ணையை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்து, மீன் வளர்ப்பு திட்டத்தினை துவக்கி வைத்தார்.அதனைத் தொடர்ந்து, திருத்தணி வட்டத்திற்குட்பட்ட வீரராகவபுரம் பகுதியில் தோட்டக்கலை – மலைப்பயிர்கள் துறை சார்பாக ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 600 சதுர அடி பரப்பளவில் 50 சதவிகிதம் மானியத்தில் அமைக்கப்பட்ட காளான் வளர்ப்பு கூடம் மற்றும் அதன் மையத்தில் நடைபெற்று வரும் காளான் வளர்ப்பு பணிகளை ஆட்சியர் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, சந்தானவேணுகோபாலபுரம் பகுதியில் கால்நடை பராமரிப்புத்துறை சார்பாக தேசிய கால்நடை இயக்கத்தின் கீழ் ரூ.1,59,000 மதிப்பீட்டிலான தீவனப்புல் நறுக்கும் கருவிகளை ரூ.90 ஆயிரம் மானியம் விலையில் 6 விவசாயிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.பின்னர், ஆர்.கே.பேட்டை வட்டம், எஸ்.வி.ஜி.புரம் கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண்மை வளர்ச்சித் திட்டத்தின் கீழ், தரிசு நிலங்களை விளை நிலங்களாக மாற்றும் திட்டத்திற்காக தரிசு நிலப் பகுதிகளையும், பாலாபுரம் கிராமத்தில் பிரதம மந்திரி நுண்ணுயிர் பாசனத் திட்டத்தின் கீழ் 100 சதவிகிதம் மானியத்தில் நுண்ணுயிர் பாசன கருவிகள் மற்றும் பப்பாளி கன்றுகள் வழங்கி, 4 ஏக்கர் தரிசு நில பரப்பில் பயிர் செய்யப்பட்டுள்ள பப்பாளி சாகுபடியினையும் மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

இதில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் மு.ராஜேந்திரன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) வி.எபினேசன், தோட்டக்கலை துணை இயக்குநர் ஐ.ஜெபக்குமாரி அனி, வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் சமுத்திரம்,வேளாண் வணிக துணை இயக்குநர் ராஜேஷ்வரி, மீன்வள உதவி இயக்குநர் வெற்றிவேலன், வேளாண்மை உதவி இயக்குநர் இளங்கோவன் மற்றும் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.