பதிவு:2024-04-09 10:08:36
திருவள்ளூர் தனி தொகுதி தேர்தல் அலுவலகத்தை முன்னாள் அமைச்சர் பி. வி.ரமணா திறந்து வைத்தார் :
திருவள்ளூர் ஏப் 09 : திருவள்ளூர் தனி தொகுதியில் அதிமுக கூட்டணி தேமுதிக சார்பில் கு நல்லதம்பி போட்டியிடுகிறார். வேட்புமனு தாக்கலுக்கு பிறகு கு.நல்லதம்பி தொடர்ந்து தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி திருவள்ளூரில் நடைபெற்ற மாபெரும் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எழுச்சி உரையாற்றியதால் வெற்றி கூட்டணியின் திருவள்ளூர் தொகுதி வேட்பாளர் எளிதில் வெற்றி பெறுவார் என்பது உறுதியானது.
இந்நிலையில் திருவள்ளூர் தொகுதியில் தேமுதிக வேட்பாளருக்கான தலைமை தேர்தல் அலுவலகம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான பி வி ரமணா தலைமை தாங்கினார். முன்னாள் எம்பி வேணுகோபால், தேமுதிக மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னாள் அமைச்சர் பி வி ரமணா தேர்தல் அலுவலகத்தை திறந்து வைத்தார். இதில் அதிமுக மாவட்ட துணை செயலாளர் கமாண்டோ பாஸ்கரன் , புரட்சி பாரதம் கட்சி நிர்வாகிகள் ஜி.மகா, இ. குட்டி, சி.பி.குமார், தேமுதிகவைச் சேர்ந்த ஆயில் சரவணன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இதில் பேசிய முன்னாள் அமைச்சர் பி வி ரமணா, நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் நல்லதம்பி வெற்றி பெற ஒவ்வொரு நிர்வாகியும் வரும் 10 நாட்களில் வீடு வீடாக சென்று அதிமுக அரசின் சாதனைகளை எடுத்து சொல்லி முரசு தினத்தில் வாக்கு சேகரித்து லட்சக்கணக்கான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
அதே போல் கூட்டணி கட்சி நிர்வாகிகளும் ஒன்றாக களம் இறங்கி பிரச்சாரம் மேற்கொண்டு வெற்றி பெற்று அதனை கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியிடம் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவித்தார்.இந்த நிகழ்ச்சியில் கடம்பத்தூர் ஒன்றிய செயலாளர் சூரகாபுரம் சுதாகர், நிர்வாகிகள் ஆர்டிஇ சந்திரசேகர், சிற்றம் சீனிவாசன், பூபாலன், கந்தசாமி, எழிலரசன், எஸ் ஏ நேசன், நரேஷ் குமார், ஞானகுமார், கோட்டீஸ்வரன், துக்காராம், செந்தில்குமார், பாலாஜி, குமரேசன், விஜயகாந்த், சித்ரா விஸ்வநாதன், வினோத் குமார் ஜெயின் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.