பதிவு:2024-04-12 07:32:30
திருத்தணியில் ரியல் எஸ்டேட் மற்றும் பைனான்ஸ் தொழில் செய்து வரும் தொழிலதிபர் வீட்டில் வருமானவரித்துறையினர் 10 மணி நேரம் அதிரடி சோதனை :
திருவள்ளூர் ஏப் 11 : திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி டாக்டர் ராதாகிருஷ்ணன் தெருவில் வசிப்பவர் ஜெயக்குமார், (50). இவர் ரியல் எஸ்டேட், பைனான்ஸ் தொழில் செய்து வருகின்றார்.இந்நிலையில் இன்று காலை, 8 மணிக்கு வேலுார் பகுதியில் இருந்து 15 பேர் கொண்ட வருமான வரித்துறையினர் துப்பாக்கி ஏந்திய போலீசாருடன் ஜெயக்குமார் வீட்டிற்குள் நுழைந்தனர். காலை 8 மணிக்கு ஆரம்பித்த சோதனை மாலை 6:20 மணி வரை நீடித்தது.
வருமான வரி துறையினர் பணம், நகைகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. வருமான வரித்துறை அதிகாரிகள் வீட்டில் இருந்து வெளியே வந்த போது, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள், அதிகாரிகளிடம் எவ்வளவு தொகை, நகை மற்றும் ஆவணங்கள் பறிமுதல் செய்தீர்கள், என கேட்டனர்.
அதிகாரிகள் சோதனை முடிந்து வெளியே வந்து தாங்கள் கைப்பற்றிய ஆவணங்கள், பணம் மற்றும் நகை போன்ற தகவல்களை சொன்னால்தான் தெரிய வரும் என்று கேட்டதற்கு அதிகாரிகள், நீங்களே கோடிகள், லட்சம் ரூபாய் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றினர் என நீங்களே செய்தி போட்டுக் கொள்ளுங்கள் என அலட்சியமாக பதில் கூறி அங்கிருந்து சென்று விட்டனர். இதனால் பத்திரிக்கையாளர்கள் மத்தியில் பரபரப்பாக காணப்பட்டது