திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கான 85 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடம் தபால் ஓட்டு பெறும் பணி : மாவட்ட தேர்தல் அலுவலர் த பிரபு சங்கர் ஆய்வு :

பதிவு:2024-04-12 07:40:30

திருவள்ளூர் ஏப் 11 : திருவள்ளூர் மாவட்டம், ஆவடி மாநகராட்சி சேக்காடு, பூவிருந்தவல்லி பாரிவாக்கம் கொல்லபுரி அம்மன் கோவில் வீதி, திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட வைஷ்ணவி நகர் ஆகிய பகுதிகளில் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான த பிரபு சங்கர் மக்களவைத் தேர்தல் -2024 முன்னிட்டு திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கான 85 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளி நபர்களிடம் தபால் ஓட்டு பெறும் பணி நடைபெற்று வருவதை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்திய தேர்தல் ஆணையம் வருகின்ற ஏப்ரல் 19 ஆம் தேதி அன்று தமிழ்நாட்டிற்கு வாக்குப்பதிவு நடைபெறும் என்று அறிவித்திருந்தது. அதன் அடிப்படையில் திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கான (தனி) கும்மிடிப்பூண்டி , பொன்னேரி ஆவடி , பூவிருந்தவல்லி , திருவள்ளூர், மாதவரம் ஆகிய இடங்களில் முதற்கட்டமாக இன்று ஏப்ரல் 10 ஆம் தேதியன்றும், இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 15 ஆம் தேதி அன்றும் நடைபெறும் . திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதிக்கான 85 வயதிற்கும் மேற்பட்ட மூத்த குடிமக்கள் 677 நபர்களும், மாற்றுத்திறனாளி 336 நபர்களும் ஆக மொத்தம் 1013 நபர்களுக்கு 12D படிவம் வழங்கப்பட்டு தபால் வாக்கு பெறும் பணி நடைபெற்று வருகிறது இப்பணியில் ஒரு குழுக்களுக்கு 50 நபர்கள் என்ற அடிப்படையில் 20 குழுக்கள் நியமிக்கப்பட்டு தபால் வாக்கு பெறும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது என மாவட்ட தேர்தல் அலுவலர் தெரிவித்தார்.

இதில் ஆவடி மாநகராட்சி ஆணையர் ஷேக் அப்துல் ரகுமான்,பூவிருந்தவல்லி உதவி தேர்தல் அலுவலர் கற்பகம், வட்டாட்சியர்கள் திரு. விஜயகுமார் (ஆவடி), வாசுதேவன்(, திருவள்ளூர்), மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.