வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.8 ஆயிரம்,வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு திருவள்ளூர் தனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் வாக்குறுதி :

பதிவு:2024-04-18 08:13:59



வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.8 ஆயிரம்,வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு திருவள்ளூர் தனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் வாக்குறுதி :

வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப பெண்களுக்கு மாதம் ரூ.8 ஆயிரம்,வேலை வாய்ப்பற்ற  இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு  திருவள்ளூர் தனி தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் வாக்குறுதி :

திருவள்ளூர் ஏப் 17 : வருகிற 19-ஆம் தேதி நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் 17-ஆம் தேதி முடிவடைகிறது. திருவள்ளூர் தனி தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தொடர்ந்து கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அதன்படி நேற்று திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மீஞ்சூர் வடக்கு ஒன்றியம் சின்னமாங்கோடு, பெரியமாங்கோடு, புதுகுப்பம், பழவேற்காடு லைட்ஹவுஸ், கோட்டைகுப்பம், தாங்கல், பெருங்குளம், ஆகிய கிராமங்களிலும், மீஞ்சூர் தெற்கு ஒன்றியம் ஏ.ரெட்டிப்பாளையம், பெரும்பேடு, கம்மார்பாளையம், ஆலாடு, ஏலியம்பேடு, கிளிக்கோடி, சோம்பட்டு ஆகிய கிராமங்களிலும் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி ஜெ எஸ்.கோவிந்தராஜன் எம்எல்ஏ., திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் துரை சந்திரசேகர் எம்எல்ஏ ஆகியோருடன் வேட்பாளர் சசிகாந்த் செந்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

இந்த வாக்குசேகரிப்பின் போது, மீஞ்சூர் வடக்கு ஒன்றிய செயலாளர் ப.சுகுமாறன், தெற்கு ஒன்றிய செயலாளர் கா.சு.ஜெகதீசன், அத்திப்பட்டு ஜி.ரவி, மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் கே.வி.ஜி. உமாமகேஸ்வரி, காங்கிரஸ் முன்னாள் வடக்கு மாவட்ட தலைவர் ஏ.ஜி சிதம்பரம், மற்றும் மாவட்ட நிர்வாகிகள் எஸ்.ரமேஷ்,. எம்.எல்.ரவி, கதிரவன், அவைத்தலைவர் மு.பகலவன், பொன்னேரி தொகுதி மேற்பார்வையாளர் அழகிரி சதாசிவம், பொதுக்குழு உறுப்பினர் சுப்பிரமணி, மீஞ்சூர் ஒன்றிய குழு துணை தலைவர் தமிழ்செல்வி பூமிநாதன், மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் கொளுத்தும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வீதி வீதியாக சென்று கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.

பொது மக்களிடம் வாக்கு சேகரிப்பின் போது பேசிய வேட்பாளர் சசிகாந்த் செந்தில், காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருப்பது போல் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களுக்கு மாதம் ரூ.8 ஆயிரம் வழங்கப்படும் என வாக்குறுதி அளித்தார். மேலும், படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும். விபத்துக் காப்பீட்டில் ஒரு குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்து கை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.