தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக திருவள்ளூர் மாவட்ட நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டுக் குழு கூட்டம்

பதிவு:2022-05-20 09:14:21



தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக திருவள்ளூர் மாவட்ட நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டுக் குழு கூட்டம்

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக திருவள்ளூர் மாவட்ட நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டுக் குழு கூட்டம்

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக, திருவள்ளூர் மாவட்ட நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டுக் குழு கூட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார்.

தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம், திருவள்ளுர் மாவட்டத்தில் பொருளாதாரத்தில் நலிவடைந்த மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி அவர்களுக்கு சுற்றுச்சூழல் தூய்மை மற்றும் சுகாதார வசதிகளை அமைத்து, அரசின் சமூக நலத்திட்டங்கள் நகர்ப்புர ஏழை மக்களை சென்றடையவும், அடிப்படை வசதிகள் செய்தல் மற்றும் அரசு துறைகளுக்கிடையே ஒருங்கிணைப்பினை ஏற்படுத்தும் பொருட்டு, மாவட்ட ஆட்சியரை தலைவராகவும், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்டத்தின் சம்மந்தப்பட்ட துறைகளை சார்ந்த அலுவலர்களை உறுப்பினர்களாக கொண்ட மாவட்ட நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டுக் குழு அமைக்கப்பட்டு, முதல் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.

இக்குழு கூட்டத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு நகர்ப்புர மேம்பாட்டு வாரியத்தின் திட்டப்பகுதி மக்களுக்கு நலதிட்டங்கள் சென்றடைதல், நியாய விலைக்கடை, புறக்காவல் நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம் உருவாக்குதல், குடிநீர் வழங்குதல், கழிவுநீர் அகற்றுதல், தெருவிளக்கு மற்றும் சாலைகள் அமைத்தல், மகளிர் சுய உதவிக்குழுக்களை உருவாக்குதல், வேலைவாய்ப்பு திறன் பயிற்சி அளித்தல், ஆவின் நிலையம் போன்ற அடிப்படை தேவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் தகுந்த நடவடிக்கை எடுத்து அடிப்படை தேவைகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது.

கூட்டத்தில், பூவிருந்தவல்லி சட்டமன்ற உறுப்பினர் ஆ.கிருஷ்ணசாமி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் வை.ஜெயக்குமார், மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மீனாட்சி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேற்பார்வை பொறியாளர் செல்வமணி, நிர்வாக பொறியாளர் மனோகரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.