பதிவு:2024-04-21 11:30:21
திருத்தணி முருகன் கோயிலில் பிரபல நடிகை ரோஜா சாமி தரிசனம் : ஆந்திர மாநிலம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பு மனுவை முருகர் சன்னதியில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தார் :
திருத்தணி முருகன் கோயிலில் பிரபல நடிகை ரோஜா சாமி தரிசனம் : ஆந்திர மாநிலம் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பு மனுவை முருகர் சன்னதியில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தார் : திருவள்ளூர் ஏப் 21 : ஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தல் வருகிற மே மாதம் 13-ம் தேதி நடைபெறுகிறது. இதனையடுத்து அதற்கான வேட்புமனு தாக்கல் 18-ஆம் தேதிதொடங்கி 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆந்திர மாநில சுற்றுலாத் துறை அமைச்சரும் பிரபல திரைப்பட நடிகையுமான ரோஜா தனது குடும்பத்துடன் திருத்தணி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். திருக்கோயில் சார்பில் அவருக்கு பிரசாதங்கள் மற்றும் மலர் மாலைகள் வழங்கப்பட்டது. ஆந்திர மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர் கட்சியின் சார்பில் மீண்டும் நகிரி தொகுதியில் போட்டியிடுகிறார். இதனால் வேட்புமனுவை தாக்கல் செய்வதற்கு முன்பாக தேர்தலில் வெற்றி பெற வேண்டிதிருத்தணி முருகன் கோயில் மூலவர் முருகப்பெருமான் சன்னதியில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்தும் மற்றும் திருத்தணி முருகன் கோயிலின் உப கோயிலான செல்வ விநாயகர் திருக்கோயிலிலும் வேட்பு மனுவை வைத்து சிறப்பு பூஜைகள் செய்து அமைச்சர் ரோஜா எடுத்துச் சென்றார். அதனையடுத்து நகிரி தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்தார்