பதிவு:2024-04-26 16:46:04
திருத்தணி அருகே பேருந்தில் சீட் பிடிப்பதில் ஏற்பட்ட தகறாறு : கஞ்சா போதையில் பேட் மற்றும் ஸ்டெம்பால் சரமாரியாக தாக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரல் : செருக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த 5 பேர் கைது :
திருவள்ளூர் ஏப் 26 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே உள்ள கோரமங்கலம் காலனியை, சேர்ந்த குமார் செருக்குனூர் காலனியை, சேர்ந்த விமல்ராஜ் இருவரும் திருவள்ளூர் அருகே ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகின்றனர்.
இவர்கள் தொழிற்சாலை பேருந்தில் பயணம் செய்யும்போது சீட் பிடிப்பதில் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது . இதனால் அவர்களிடையேமுன் விரோதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் செருக்கனூர் கிராமத்தைச் சேர்ந்த விமல்ராஜை கோரமங்கலம் காலனி சேர்ந்தவர்கள் தாக்கியவர்களில் இடம் பெற்றிருந்த கோரமங்கலம் காலனியைச் சேர்ந்த சஞ்சய் என்ற 17 வயது சிறுவனை மூன்று நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் கே ஜி கண்டிகைக்கு சென்று கொண்டிருந்த போது அவரை செருக்கனூர் காலனியை சேர்ந்த வாலிபர்கள் மடக்கி பிடித்து கடத்திச் சென்று அங்குள்ள மைதானத்தில் வைத்து கஞ்சா போதையில் கிரிக்கெட் பேட் மற்றும் ஸ்டெம்ப்பால் சரமாரியாக தாக்கி உள்ளனர்.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இச்சம்பம் தொடர்ந்து திருத்தணி போலீசார் வழக்கு பதிவு செய்து செருக்கனூர் காலனியை சேர்ந்த புஷ்பராஜ், சூர்யா, தமிழ்செல்வன், சுஜன் ராஜ் உட்பட 5 பேரை கைது செய்தனர். மேலும் தலைவரான ஒரு நபரை தேடி வருகின்றனர். கஞ்சா போதையில் 17 வயது சிறுவனை ஆறு பேர் கொண்ட கஞ்சா ஆசாமிகள் கிரிக்கெட் பேட் மட்டும் ஸ்டெம்ப்பால் அடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.