திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்திருந்த ஆக்சிஜன் சிலிண்டர் அறையில் புகுந்த நபர் சுகாதார துறையினரை 2 மணி நேரமாக அலறவிட்டதால் பரபரப்பு :

பதிவு:2022-05-20 09:25:03



திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்திருந்த ஆக்சிஜன் சிலிண்டர் அறையில் புகுந்த நபர் : தன்னை வெட்ட, குத்த வருவதாக கூறி நோயாளிகள், பொதுமக்கள், சுகாதார துறையினரை 2 மணி நேரமாக அலறவிட்டதால் பரபரப்பு :

திருவள்ளூர்  அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வைத்திருந்த ஆக்சிஜன் சிலிண்டர் அறையில் புகுந்த நபர் சுகாதார துறையினரை 2 மணி நேரமாக அலறவிட்டதால் பரபரப்பு :

திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் கொரோனா வார்டில் சேர்க்கப்படுபவர்களுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தேவைப்படுவதால் அதனை ஒரு அறையில் பத்திரமாக பாதுகாத்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று பிற்பகல் 1.50 மணி அளவில் 52 ஆக்ஸிஜன் சிலிண்டர் வைத்திருந்த அறையில் புகுந்த நபர் கதவை மூடிக் கொண்டதால் மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதனால் நோயாளிகள் மற்றும் உறவினர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். இது குறித்து மருத்துவமனை நிர்வாகத்திடம் தெரிவித்ததையடுத்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தனர்.சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆக்சிஜன் சிலிண்டர் அறையிலிருந்து வெளியே வராமல், என்னை கத்தியால் வெட்ட வராங்க... குத்த வராங்க... என்று சிலிண்டரை பிடித்துக் கொண்டு அலறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதனையடுத்து திருவள்ளூர் நகர காவல் துறையினர் விரைந்து வந்து ஆக்சிஜன் சிலிண்டர் வைத்திருந்த அறைக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது என்னை வெட்ட வராங்க, குத்த வராங்க என்று அலறியதால், நடவடிக்கை எடுக்கிறோம் எனக் கூறி 3.50 மணியளவில் விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.

விசாரணையில், அவர் திருவள்ளூர் அடுத்த காரணி பகுதியைச் சேர்ந்த ராமுவின் மகன் யுவராஜ் (32) என்பது தெரியவந்தது. இதனையடுத்து ஏன் இப்படி அலறினார் என்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் மருத்துவமனையில் இருந்த நோயாளிகள்,பொதுமக்கள்,மருத்துவர்கள் என அனைவரும் 2 மணி நேரத்திற்கும் மேலாக அலறவிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.