திருவள்ளூர் பகுதியில் பராமரிப்பின்றி அம்மா பூங்காவுடன் நவீன உடற்பயிற்சி கூடம் :

பதிவு:2024-04-27 14:39:17



திருவள்ளூர் பகுதியில் பராமரிப்பின்றி அம்மா பூங்காவுடன் நவீன உடற்பயிற்சி கூடம் :

திருவள்ளூர் பகுதியில் பராமரிப்பின்றி அம்மா பூங்காவுடன் நவீன உடற்பயிற்சி கூடம் :

திருவள்ளூர் ஏப் 28 : தமிழகத்தில் இளைஞர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகாமல் நல்வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காக இருக்க புரட்சித்தலைவி அம்மா பெயரில் அம்மா பூங்காவை தமிழகமெங்கும் திறக்க அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார்.அதன்படி திருவள்ளூர் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடாரம் அமைக்கும் பணி தொடங்கியது. அதன்படி திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் வெண்மனம்புதூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடாரத்தை அமைக்கும் பணி கடந்த 2016- 17 ஆம் ஆண்டு துவங்கி நடைபெற்றது.2019 ஜனவரி மாதம் 18-ஆம் தேதி இந்த அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை அப்போதைய மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் ஊரக தொழில் துறை அமைச்சர் பென்ஜமின் மற்றும் தமிழ் பண்பாடு மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் பாண்டியராஜன் ஆகியோர் முன்னிலையில் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் காணொளி மூலம் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் அம்மா பூங்காவும், ரூ. 10 லட்சம் மதிப்பீட்டில் உடற்பயிற்சி கூடமும் ஒரே வளாகத்தில் அமைக்கப்பட்டு சீராக பராமரிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஆட்சி மாற்றத்திற்கு பிறகு அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட பல்வேறு சீரிய திட்டங்களுக்கு மூடு விழா நடத்தியது போல் இளைஞர்களை நல்வழிப்படுத்துவதற்காக கொண்டு வரப்பட்ட இந்த அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை இழுத்து மூடியது தான் விடியா திமுக அரசின் சாதனையாக உள்ளது. இந்த வெண்மனம் புதூர் கிராமத்தில் ரூ. 30 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடம் போதிய பராமரிப்பின்றி கிடப்பதாலும் அப்பகுதி வாசிகளிடம் போதிய விழிப்புணர்வு இல்லாததாலும் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடாரமானது முழுவதும் முள்புதர் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. மேலும் விளையாட்டு உபகரணங்கள் துருப்பிடித்து வீணாகிப் போய் உள்ளது. இதனால் குடிமகன்கள் அம்மா பூங்காவை மது கூடாரமாக மாற்றிவிட்டனர். உங்க முழுவதும் மது பாட்டில்கள் சிதறி கிடக்கின்றன. இது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சி யை ஏற்படுத்தி உள்ளது. புதிதாக திட்டங்களை கொண்டு வரவில்லை என்றாலும் ஏற்கனவே அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை மூடுவதில் விடியா திமுக அரசு அக்கறை காட்டுவது வேதனை அளிக்கிறது. எனவே மாவட்ட ஆட்சியர் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி கூடத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.