மனைவி பெயரில் உள்ள சொத்துக்களை, நகைகளை அபகரித்த உணவு உடை வழங்கி பராமரிக்க தவறிய வீட்டை விட்டு துரத்திய மகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி : 76 வயது ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் :

பதிவு:2024-05-01 20:39:29



மனைவி பெயரில் உள்ள சொத்துக்களை, நகைகளை அபகரித்த உணவு உடை வழங்கி பராமரிக்க தவறிய வீட்டை விட்டு துரத்திய மகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி : 76 வயது ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் :

மனைவி பெயரில் உள்ள சொத்துக்களை, நகைகளை அபகரித்த உணவு உடை வழங்கி பராமரிக்க தவறிய வீட்டை விட்டு துரத்திய மகன் மீது நடவடிக்கை எடுக்க கோரி : 76 வயது ஓய்வு பெற்ற அரசு ஊழியர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் :

திருவள்ளூர் மே 01 : திருவள்ளூரில் சொத்துக்களை அபகரித்துக் கொண்டு தனக்கு உணவு உடை ஆகியவற்றை பராமரிக்க தவறிய மகன் மீது பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு மற்றும் நலம் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க கோரி அரசு ஊழியர் ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார்.

திருவள்ளூர் பாரதிதாசன் தெருவை சேர்ந்தவர் ரகுநாதன் (75). ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவருக்கு மூன்று மகள்களும் ஒரு மகனும் உள்ளனர்.இந்நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு இவரது மனைவி சந்திராவை மகன் பாலாஜி தனது வாகனத்தில் ஆவடி அடுத்த மோரை கிராமத்திற்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது வாகனத்தை அஜாக்கிரதையாக ஒட்டியதால் ஏற்பட்ட விபத்தில் மனைவி சந்திராவுக்கு தலையில் காயம் ஏற்பட்டு சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

அதே நேரத்தில் மகன் பாலாஜி செய்த விபத்தினை மறைத்து விட்டு மனைவியை தவறி விழுந்து விட்டதாக தெரிவித்தனர். ஆனால் தாயார் இறந்ததற்கு செய்ய வேண்டிய எந்த சடங்குகளையும் மகன் பாலாஜி செய்ய மறுத்து விட்டார்.மேலும் மனைவி சந்திரா பெயரில் வங்கியில் இருந்த ரூ.18 லட்சம் ரூபாய் மற்றும் 25 சவரன் நகை மற்றும் வெள்ளி நகைகள் நில பத்திரங்கள் ஆவணங்கள் பேங்க் லாக்கரில் இருந்தது.

அப்போது மகன் பாலாஜியை வாரிசுதாரராக நியமித்துள்ளார் ரகுநாதன்.தனக்கு உடல் நிலையும் கண் பார்வையும், செவித்திறன் குறைபாடும் இருப்பதால் மகன் பாலாஜியை நியமிக்க மனைவியிடம் தெரிவித்துள்ளார். அதனையடுத்து, தனது தரப்பில் இருக்கும் குறைபாடுகளையும் அவருக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு இருந்த நகைகளை பணத்தையும் ஒரு பகுதி எடுத்து மகன் பாலாஜி செலவு செய்துள்ளார்.

மேலும் இதுவரை தனக்கு உணவு , மருத்துவ செலவுகளோ மருந்து மாத்திரைகளோ எதுவும் வாங்கி தரவில்லை. இது குறித்து பாலாஜியிடம் ரகுநாதனின் மகள்கள் கேட்டபோது அசிங்கமாக பேசி கொலை மிரட்டல் விடுத்தும், சகோதரி என்றும் பாராமல் கடந்த 26-ஆம் தேதி கடுமையாக தாக்கியுள்ளார்.இதனால் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளான ரகுநாதன் திருவள்ளூர் வீரராகவர் கோயில் உணவின்றி, பிச்சையெடுத்து அங்கேயே உறங்கி வந்துள்ளார். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளான ரகுநாதன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார்.

அதில் என் உழைப்பில் வந்த வீடு, நகை மற்றும் வெள்ளிப் பொருட்களை எனது மகன் பாலாஜியும் அவருடைய மனைவி வேத பிரியா மற்றும் வேத பிரியா தந்தை சந்திரசேகர் மற்றும் அண்ணன் லோகேஷ் ஆகியோர் திட்டமிட்டு என்னை விட்டு விட்டு வெளியே அனுப்பி என்னை பசி பட்டினியால் கொடுமை செய்து கொல்லவுவும் துணிந்து விட்டார்கள். அவர்களால் என் உயிருக்கு உத்திரவாதம் இல்லை.

எனவே எனது மனைவியை விபத்து என்ற பெயரால் இறப்பை ஏற்படுத்திய மகன் பாலாஜி என்னை பட்டினி போட்டு கொல்லும் சூழ்ச்சி செய்து வருகிறார். ஆகையால் தன்னை பராமரிக்க தவறியும் என் சொத்தையும் எனது மனைவியின் நகைகளையும் அபகரிக்க நினைக்கும் மகன் பாலாஜியிடமிருந்து என்னை பாதுகாத்து சொத்தை மீட்டு தர வேண்டும் . மேலும் அதற்கு உடந்தையாக இருக்கும் அவரது மனைவி மாமனார் மைத்துனர் ஆகியோர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த புகாரில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் முதியவர் ரகுநாதன் தெரிவித்துள்ளார்.