தமிழ்நாடு தடகள சங்கத்துடன் இணைந்த திருவள்ளூர் மாவட்ட தடகள சங்கம் மாநில அளவிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி வரும் 25- ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

பதிவு:2024-06-21 12:13:33

திருவள்ளூர் ஜூன் 21 : தமிழ்நாடு தடகள சங்கத்துடன் இணைந்த திருவள்ளூர் மாவட்ட தடகள சங்கம் மாநில அளவிலான ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டி வருகிற ஜூன் மாதம் 29-ஆம் தேதி சென்னை ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.

அதன்படி ஓட்டம், குதித்தல், எறிதல் ஆகிய போட்டிகள் நடத்தப்படும் மற்றும் வயதுப் பிரிவு 6, 8, 10 வயதுக்குட்பட்டோர்,12 வயதிற்குட்பட்டவர்கள், 17 வயதிற்குட்பட்டவர்கள், வயதுவரம்பு அற்றோர் என ஆறு பிரிவுகளில் தடகள போட்டி நடைபெறுகிறது.

இப்போ போட்டியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் வருகிற 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.இது குறித்த மேலும் விவரங்களுக்கு 90874666646, 9363621687 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளார்.