கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சி : 106 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார் :

பதிவு:2024-06-21 12:25:26



கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சி : 106 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார் :

கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி  நிறைவு நாள் நிகழ்ச்சி : 106 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார் :

திருவள்ளூர் ஜூன் 21 : திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த் தீர்வாயம் எனப்படும் ஜமாபந்தி நிறைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கி 106 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஜமாபந்தி வருவாய் தீர்வாயக் கணக்கு முடிப்பு குறித்து நிகழ்வு மாவட்ட முழுவதும் நடைபெற்று முடிந்துள்ளது. அதன் அடிப்படையில் கும்மிடிப்பூண்டி வட்டத்தில் நடைபெற்ற வருவாய் தீர்வாயக் கணக்கு நிறைவு நாளில் ஏழு நாட்களில் வழங்கப்பட்ட மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு உங்கள் உரிய நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. வருவாய் தீர்வாயம்- பசலி என்பது ஆங்கிலேயர் காலத்தில் பொதுமக்களிடையே நிலவரி செய்வதற்காக வருவாய் துறை என்ற துறையை ஆரம்பித்து அரசுக்கு பொது மக்களிடையே வரியினை வசூல் செய்து வருவாய் ஈட்டி தந்தது.

ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் வருவாய் தீர்வாயம் பசலி கணக்கு முடிப்பு நடைபெறும் நாட்களில் வருவாய் துறையினர் பட்டா, சிட்டா, அடங்கல் ஆகியவைகளை குறித்த கணக்குகளை சரி பார்த்து கொள்வார்கள். இந்தாண்டு கும்மிடிபூண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் 07.06.2024 , 11, 12,13,14.06.2024, மற்றும் 18, 19 .06.2024 ஆகிய ஏழு நாட்கள் நடைபெற்றது.

இந்த வருவாய் தீர்வாயம் - பசலி (1433) நாட்களில் வழங்கப்பட்ட பட்டா மாற்றம் முழு புலம், பட்டா மாற்றம் உட்பிரிவு, வீட்டு மனை பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் முதியோர் உதவித் தொகையும் மற்றும் விதவை உதவித் தொகையும், பட்டா மேல்முறையீடு குடும்ப அட்டை பிறப்பு, இறப்பு ,வாரிசு சான்றிதழ் என 757 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 106 மனுக்கள் தீர்வு காணப்பட்டது 651 மனுக்கள் பரிசீலனையில் உள்ளது. விரைவில் பரிசீலனையில் உள்ள அனைத்து மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் ப்ரீத்தி , தனி வட்டாட்சியர் அருள் வளவன் ஆரோக்கியதாஸ், வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர், துணை வட்டாட்சியர்கள் வருவாய் ஆய்வாளர்கள் கிராம அலுவலக உதவியாளர்கள் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.