வேண்பாக்கம் பகுதியில் தொடர் மின்வெட்டால் பொன்னேரி பகுதி மக்கள் அவதியடைந்து வருவதாக கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் :

பதிவு:2024-06-22 12:12:06

திருவள்ளூர் ஜூன் 22 : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் பகுதியில் உள்ள மின்வாரிய அலுவலகம் அருகே தொடர் மின்வெட்டால் பொன்னேரி பகுதி மக்கள் அவதியடைந்து வருவதாக கூறி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பொன்னேரியில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதால் பொன்னேரி மக்களுக்கு தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும், அறிவிக்கப்படாத மின் வெட்டால் ஒரு லட்சம் பயனீட்டாளர்கள் தவித்து வருவதாகவும், மழைக்கால முன்னெச்சரிக்கை மேற்கொள்ளாததால், சிறு மழைக்கே மின்வெட்மு ஏற்படுவதாகவும், மின் இணைப்புகளுக்கு ஏற்ப 110 கேவி துணை மின் நிலையம் அமைக்கவும்,மின் ஊழியர்களையும் தேவையான உபகரணங்களையும் அதிகப்படுத்திட வேண்டும் எனவும், மின்வாரிய பயனீட்டாளர்களின் பாதிப்புகளில் போர்கால அடிப்படையில் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் முழக்கங்கள் இட்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் வேண்பாக்கம் மின்வாரிய செயற்பொறியாளர் உதயகுமாரிடம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மனு அளித்தனர்.