திருவள்ளூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் : 22 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார் :

பதிவு:2024-06-23 14:01:16



திருவள்ளூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் : 22 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார் :

திருவள்ளூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் : 22 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார் :

திருவள்ளூர் ஜூன் 22 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் நடைபெற்றது.முகாமில் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர்.22 பயனாளிகளுக்கு பணி நியமனத்திற்கான ஆணைகளை வழங்கி பேசினார்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க நடைபெற்ற மாற்றுத்திறனாளி நல அலுவலகம் மற்றும் தனியார் நிறுவனம் இணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கான தனியார் நிறுவனத்தின் சிறப்பு வேலை வாய்ப்பு முகாம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் வேலை வாய்ப்பு அமேசான், பிரைட் பியுட்சர், டாக்டர் ரெட்டிபவுண்டேஷன், இந்துஜா லேலண்ட் பைனான்ஸ் லிமிடெட், மேஜிக் பஸ் இந்தியா பவுண்டேஷன் ,முருகப்பா, ரெபெல்; புட்ஸ், ரிலையன்ஸ் ரீடெய்ல், ஷங்கர் என்.பி.ஜப்பான் பிரைவேட் லிமிடெட், ஸ்பேக் ஆட்டோ மோட்டிவ்ஸ், தாங்க்யு,யூத் ஃபார் ஜாப், இன்சுரா போன்ற 13 வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்கள் கலந்துக்கொண்டன. 108 ஆண் மாற்றுத்திறனாளி வேலைநாடுநர்களும், 59 பெண் மாற்றுத்திறனாளி வேலைநாடுநர்களும் கலந்து கொண்டனர்.

இதில்15 ஆண் மாற்றுத்திறனாளி வேலைநாடுநர்கள் மற்றும் 7 பெண் மாற்றுத்திறனாளி வேலைநாடுநர்களும் தேர்வு செய்யப்பட்டனர். இது தொடக்கம் தான், மேலும் இது போன்ற வேலை முகாம்களில் நடத்தி அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் வேலை கிடைக்கும் வகையில் ஏற்படுத்தி தரப்படும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளி அலுவலர் சினிவாசன். உதவி இயக்குநர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் விஜயா, உதவி இயக்குனர் திறன் பயிற்சி அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் காமராஜ், முட நீக்கியல் வல்லுநர் பிரித்தா, பேச்சு பயிற்சியாளர் காயத்ரி மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.