பதிவு:2024-06-23 14:07:30
திருவள்ளூர் மாவட்டத்தில் பாஜக ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதி மறுப்பு : ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த 200-க்கும் மேற்பட்டோர் கைது :
திருவள்ளூர் ஜூன் 22 : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாராய உயிரிழப்புகளை தடுக்க தவறிய திமுக அரசைக் கண்டித்து திருவள்ளூர் மருத்துவக் கல்லூரி அருகே மாவட்ட பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நடைபெறவிருந்ந ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.
இதனை அடுத்து ஆர்ப்பாட்டத்திற்காக அமைக்கப்பட்ட மேடை மற்றும் ஜெனரேட்டர், டேபிள், வாட்டர் பாட்டில் என அனைத்தையும் போலீசார் அப்புறப்படுத்தினர். மேலும் மாவட்டத் தலைவர் எம்.அஸ்வின் என்கிற ராஜசிம்மம் மகேந்திரா தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்த பாஜக வினரை டிஎஸ்பி இரா.அழகேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் அந்தோணி ஸ்டாலின், வெற்றிச்செல்வன், ரவிக்குமார் மற்றும் போலீசார் கைது செய்தனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த தமிழ்நாடு மாநில பிரச்சார பிரிவு தலைவர் குமரி கிருஷ்ணன், மாநில மருத்துவர் அணி தலைவர் டாக்டர் பிரேம் குமார், மாநில ஓ பி சி அணி பிரிவு செயலாளர் ராஜ்குமார், மாவட்ட பொதுச் செயலாளர்கள் கருணாகரன், ஆர்யா சீனிவாசன் லயன் சீனிவாசன் ஜெய்கணேஷ், மாவட்ட பொருளாளர் மதுசூதனன், மாவட்ட செயலாளர்கள் பாலாஜி, ரமேஷ், பன்னீர்செல்வம் மண்டல் தலைவர்கள் பழனி, சதீஷ்குமார், ரவிக்குமார், மாவட்ட துணைத் தலைவர்கள் முல்லை ஞானம், சண்முகம், நிர்வாகிகள் பூண்டி பாண்டுரங்கன், சிவரஞ்சனி , சித்ராதேவி, சுகுதேவ், மாவட்ட மருத்துவ அணி தலைவர் லோகேஷ் பிரபு, டில்லி பாபு, உமா மகேஸ்வரி உட்பட ஆர்ப்பாட்டத்தில் கலந்துக் கொள்ள வந்த 200-க்கும் மேற்பட்டோரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்துள்ளனர். பதட்டத்தை தவிர்க்க போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.