திருவள்ளூர் அடுத்த மணவாள நகரில் தனியார் கெஸ்ட் ஹவுஸில் பட்டாக் கத்திகளுடன் தங்கியிருந்த 5 பேர் கைது : 2 பட்டாக் கத்திகள் பறிமுதல் செய்து விசாரணை

பதிவு:2022-05-20 09:41:39

திருவள்ளூர் மே 20 : திருவள்ளூர் அடுத்த மணவாளநகர் பகுதியிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் உள்ள கெஸ்ட் ஹவுஸில் மர்மநபர்கள் தங்கியிருப்பதாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருன்குமாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து டிஎஸ்பி சந்திரதாசன் தலைமையில் காவல்துறையினர் தனியார் திருமண மண்டபத்திற்கு சென்று சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது திருமண மண்டபத்தில் உள்ள கெஸ்ட் ஹவுஸ் அறையில் 5 பேர் கொண்ட மர்ம நபர்கள் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து மணவாள நகர் போலீசார் அவர்களை கைது செய்து விசாரணையில் ஈடுபட்டனர்.

விசாரணையில் இவர்கள் பகுஜன் சமாஜ் கட்சி கடம்பத்தூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் (30), குற்ற சரித்திர பதிவேடு கொண்ட திருநின்றவூர், பகுதியைச் சேர்ந்த ஜோசப் தேவகுமார் (35), மோகன் பிரபு (24) அபினாஷ் (19), மப்பேடு டில்லிபாபு (27) என்பது தெரியவந்தது. அதனையடுத்து 5 பேரை கைது செய்து அவர்கள் வைத்திருந்த 2 பட்டா கத்திகளை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். இதில் திருவள்ளூர் பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவரை கொலை செய்ய திட்டம் தீட்டியதாக விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து கைது செய்யப்பட்ட ஐந்து பேரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும் தப்பி ஓடிய பகுஜன் சமாஜ் கட்சி திருவள்ளூர் பகுதி செயலாளர் நீலகண்டனை மணவாளநகர் போலீசார் தேடி வருகின்றனர்.