பதிவு:2024-06-24 14:51:41
திருவள்ளூரில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொதுக்குழு கூட்டம் : மாநில பொதுச் செயலாளர் இரா.தாஸ் பங்கேற்பு :
திருவள்ளூர் ஜூன் 24 : திருவள்ளூரில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் மகாலட்சுமி,மோகனா, ஸ்டீபன் சற்குணர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட பொருளாளர் லோகைய்யா அனைவரையும் வரவேற்றார்.இதில் மாநில பொதுச் செயலாளர் மற்றும் ஜாக்டோஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் கலந்து கொண்டு பேசினார் .
அப்போது, எம்மிஸ் பணியை புறக்கணிக்கப் போவதாகவும் இதனால் கற்பித்தல் பணி பாதிப்பு ஏற்படுகிறது என்று அரசிடம் கோரிக்கை வைத்தோம்.அதனை ஏற்றுக் கொண்டு ஆசிரியர்கள் கற்பித்தல் பணியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என்று எம்மிசி பணிகள் செய்ய சுமார் 8 ஆயிரம் பணியாளர்கள் நியமனம் செய்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சருக்கு பாராட்டுக்களையும் தமிழ் நாடு முதலமைச்சர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
அதேபோல் 12 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக வாக்குறுதி அளித்ததை நிறைவேற்ற வேண்டும்.குறிப்பாக புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டம் நடைமுறை படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை நீக்க வேண்டும். மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்கவேண்டும். அரசாணை 243 ஐ ரத்து செய்து பழைய நிலையில் சீனியாரிட்டி ஒன்றிய அளவில் நடைமுறை படுத்த வேண்டும்.
தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பணி மூப்பு அடிப்படையில் பதவி உயர்வு வழங்கிட வேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு மீண்டும் தரவேண்டும்.நிறுத்திவைக்கபட்டுள்ள இன்சென்ட்டிவ் வழங்க வேண்டும்.பின்னேற்பு ஆணை வழங்க வேண்டும்.மேலும் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப வேண்டும்.மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் விலையில்லா பொருட்கள் பள்ளிக்கே சேர்க்க குறிப்பிட்ட நிதி அரசு ஒதுக்கீட்டு செய்தும் தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் விலையில்லா பொருட்களான பாடப்புத்தகங்கள் பள்ளி களுக்கே கொண்டு வந்து வழங்கவில்லை. தமிழகம் முழுவதும் முறையாக பள்ளிக்கே கொண்டு வந்து வழங்கி யுள்ளார்களா ?என்று கண்காணிப்பு அவசியம் இவ்வாறு தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் இரா.தாஸ் பேசினார் .
மேலும் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரத்தில் ஜூலை இறுதி வாரத்தில் நடைபெற உள்ள கோரிக்கை மாநாட்டில் பத்தாயிரம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் அலைகடல் என்று புறப்பட்டு வரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.கூட்டத்தில் பள்ளிப்பட்டு செயலாளர் ரமேஷ், தலைவர் ரமணய்யா,திருவாலங்காடு மோகன் குமார்,திருத்தணி தலைவர் தனஞ்செழியன் மாவட்ட துணை செயலாளர் வில்சன், திருவள்ளூர் செயலாளர் பாலுமகேந்திரன், பிரசன்னா, மற்றும் கேபிரியேல் உட்பட பலர் கலந்து கொண்டனர்.