பதிவு:2024-06-24 11:52:31
மக்களைப் பற்றியும், நாட்டில் உள்ள பெண்களைப் பற்றியும் அக்கரை கொள்ளாத அரசாக பாஜக அரசு செயல்பட்டு வருகிறது : திருவள்ளூரில் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவி ஹஸினா சையத் பேட்டி :
திருவள்ளூர் ஜூன் 24 : தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ சார்பில் பாஜக மன்னர் ஆட்சியை தகர்த்தெறிந்த ஜனநாயக கொண்டாட்ட நிகழ்ச்சியானது திருவள்ளூர் வடக்கு மாவட்டம் மகளிர் காங்கிரஸ் சார்பில் நடைபெற்றது.மாவட்ட மகளிர் அணி தலைவர் மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜோதிசுதாகர் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவி ஹஸினா சையத் மற்றும் முன்னாள் காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஏ.ஜி, சிதம்பரம் ஆகியோர் கலந்து கொண்டு மாவட்ட அளவில் மகளிர் அணியில் சிறப்பான முறையில் பணியாற்றிய மகளிருக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கியும் சான்றிதழ்கள் வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் தலைவி ஹஸினா சையத், நடந்து முடிந்த 2024 நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது. அதிலும் முக்கியமாக திருவள்ளூர் தொகுதியில் சசிகாந்த் செந்தில், பெருவாரியான வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளார்.
அதேபோல் தமிழகம் முழுவதும் பாண்டிச்சேரி உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றது. அதனை கொண்டாடும் வகையில் மகிளா காங்கிரஸ் சார்பில் 40 தொகுதிகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக திருவள்ளூரிலும் பாஜக மன்னர் ஆட்சியை தகர்த்தெறிந்த ஜனநாயக கொண்டாட்ட நிகழ்ச்சி நடைபெற்றது.
மத்தியில் ஆட்சியில் அமர்ந்திருக்கும் பாஜக அரசு பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்காத அரசாக உள்ளது . மணிப்பூரில் பெண்களுக்கு ஏற்பட்ட உச்சத்தின் அவமானங்களை கேள்வி கேட்க முடியாத அரசாக பாஜக அரசு விளங்கி வருகிறது . வடமாநிலங்களில் பெண்களை ஒரு போதைப் பொருளாக பயன்படுத்தி வரும் அரசாக பாஜக அரசு விளங்கி வருவதால் வெகுவிரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வரப்போகிறது.அப்பொழுது காங்கிரஸ் இந்தியா கூட்டணி பெரும் வாக்குகளை பெற்று மத்தியில் ராகுல் காந்தி பிரதமராக ஆட்சியில் அமரப்போவதாக அவர் தெரிவித்தார்.
இதில் தமிழ்நாடு மகளிர் காங்கிரஸ் துணைத் தலைவர் மைதிலி, மகளிர் காங்கிரஸ் மாநில செயலாளர் மாத்தூர் ரங்கநாயகி,மாநில துணைத்தலைவர் ஏகாட்டுர் ஆனந்தன், மாநில செயலாளர் சம்பத்,ஓபிசி மாநில பொதுச் செயலாளர் வெங்கடேசன்,மாவட்ட பொது செயலாளர் ரகுராமன், மணவாளன்,மாவட்ட பொது செயலாளர் போட்டோ செல்வம், மாவட்டத் தலைவர் சேவாதனம் இளங்கோவன், டி.என்.பாபு, பாஸ்கர், பிரகாஷ்ராஜ், கலீல் ரகுமான், சரஸ்வதி, லலிதா, மாவட்டத் துணைத் தலைவர் ரீட்டா, மகேஸ்வரி, பொதுச் செயலாளர் கோமதி, பொன்னேரி தொகுதி தலைவர் அனிதா, மகளிர் அணி மாவட்ட தலைவர் தனலட்சுமி, சுசீலா, கல்பனா, ரஞ்சினி, லட்சுமி, வள்ளி, ஆஷா, கன்னியம்மாள், பவதாரணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.