பதிவு:2024-06-25 18:44:10
திருவள்ளூரில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 570 கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு,அரசு நலத்திட்ட உதவிகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் வழங்கினார் :
திருவள்ளூர் ஜூன் 25 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வருகை புரிந்த பொதுமக்கள், தங்களது குறைகளை நிவர்த்தி செய்வது தொடர்பாகவும் பொதுபிரச்சனைகள் தொடர்பாக உதவிகள் வேண்டியும் 570 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். இதில், நிலம் சம்பந்தமாக 148 மனுக்களும் சமூக பாதுகாப்புதிட்டம் தொடர்பாக 93 மனுக்களும் வேலைவாய்ப்பு வேண்டி 115 மனுக்களும் பசுமைவீடு, அடிப்படை வசதிகள் வேண்டி 91 மனுக்களும் மற்றும் இதரதுறைகள் சார்பாக 123 மனுக்களும் என மொத்தம்570 மனுக்கள் பெறப்பட்டன. இம்மனுக்களின் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தகுதியுள்ள பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கிட சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் தேசிய அறக்கட்டளை மூலமாக 26 மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டபூர்வ பாதுகாவலர் சான்றிதழையும், மக்களுடன் முதல்வர் முகாமில் 3 பயனாளிகள் கனரக வாகனம், பயணியர் ஆட்டோ, கார் வாங்குவதற்கான வங்கிக் கடன் உதவி கேட்டு விண்ணப்பித்திருந்தார்கள் அவர்களுக்கு தாட்கோ திட்டத்தின் கீழ் மானியத்துடன் கூடிய வங்கிக் கடன் விடுவிக்கப்பட்டு பயனாளிகளின் 5% பங்களிப்புடன் ரூ.10,67,584 மதிப்பீட்டிலான கனரக வாகனமும், ரூ.2,98511 மதிப்பீட்டிலான பயனியர் ஆட்டோவும், ரூ.9,41,776 மதிப்பீட்டிலான கார் என மொத்த ரூ.23,07,871 மதிப்பீட்டிலான அரசு நல திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் பயனாளிகளிடம் வழங்கினார்.
கூட்டத்தில் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) மரு.ஒ.என்.சுகபுத்ரா, உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆயுஷ் குப்தா, வருவாய் கோட்டாட்சியர்கள் கற்பகம் (திருவள்ளூர்), தீபா(திருத்தணி), தனித் துணை ஆட்சியர் வி.கணேசன், மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன், மாற்றுத்திறனாளி நல அலுவலர் சீனிவாசன், மற்றும் பல்வேறு துறை சார்ந்த உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.