திருவள்ளூரில் கள்ளச்சாராயம் கண்காணித்தல் மற்றும் ஒழித்தல், கள்ளத்தனமாக மது விற்பணையை ஒழித்தல் தொடர்பாக அலுவலர்கள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் :

பதிவு:2024-06-25 18:52:17



திருவள்ளூரில் கள்ளச்சாராயம் கண்காணித்தல் மற்றும் ஒழித்தல், கள்ளத்தனமாக மது விற்பணையை ஒழித்தல் தொடர்பாக அலுவலர்கள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் :

திருவள்ளூரில் கள்ளச்சாராயம் கண்காணித்தல் மற்றும் ஒழித்தல், கள்ளத்தனமாக மது விற்பணையை ஒழித்தல் தொடர்பாக  அலுவலர்கள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் :

திருவள்ளூர் ஜூன் 25 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கள்ளச்சாராயம் கண்காணித்தல் மற்றும் ஒழித்தல், கள்ளத்தனமாக மது விற்பணையை ஒழித்தல் தொடர்பாக அலுவலர்கள் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாச பெருமாள், செங்குன்றம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிசு.பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் கோட்ட அளவில் வாரந்தோறும் ஆய்வுக்கூட்டம் சார் ஆட்சியர்,வருவாய் கோட்டாட்சியர் அவர்களின் தலைமையில் நடத்தப்பட வேண்டும் எனஅறிவுறுத்தப்பட்டது. மேற்படி கூட்டத்தில் துணைகாவல் கண்காணிப்பாளர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) மற்றும் காவல் கண்காணிப்பாளர் (மதுவிலக்கு) ஆகியோர் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுத்தப்பட்டது.டாஸ்மாக் கடைகளில் மொத்த விற்பனை மேற்கொள்ளக்கூடாது. விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தப்பட்டது. மேலும் மேற்படி மொத்த விற்பனை செய்யும் கடைகளின் மேற்பார்வையாளர்களின் மீது உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சுதல், விற்பனை செய்தல்,கள் விற்பனை செய்தல், மதுபானங்கள் விதிமீறி விற்பனை செய்தல், அண்டை மாநில மதுபானங்கள் விற்பனை செய்தல், அண்டை மாநில மதுபானங்கள் விற்பனை செய்தல், கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் மற்றும் போதை பொருள் கடத்துதல் மற்றும் விற்பனை செய்தல் தொடர்பான புகார்களை 9840327626 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கும் மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண்.10581 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தகவல்களை தெரிவிக்கலாம் என்றும், தகவல் தெரிவிப்பவர்களின் விவரங்கள் இரகசியம் காக்கப்படும் என்ற விவரத்தினைஅனைத்து கிராமங்களிலும் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்கள் விளம்பரம் செய்யவேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.விற்பனை குறைவாக உள்ள கடைகளின் விவரங்களை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறும், மேலும் அதற்கான காரணத்தினை கள விசாரணை மேற்க்கொள்ள வேண்டும் என மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

கடந்த வருட புள்ளி விவரம், கடந்த மாத புள்ளி விவரம் மற்றும் கடந்த வார புள்ளி விரவங்களுடன் தற்போதைய புள்ளி விவரங்களை ஒப்பிட்டு, குறைந்த அளவு விற்பணை ஆகும் கடைகளுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட மேலாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.குறைவாக விற்பணை செய்யப்படும் கடைகளின் மீது, சீரற்ற முறையில் கள விசாரணை செய்யப்பட வேண்டும் என உதவி ஆணையர் (கலால் ) அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கள்ளத்தனமாக (சந்துக்கடை) மது விற்பணை செய்யப்படும் இடங்களின் மீது, உதவி ஆணையர் (கலால் ) மற்றும் அவர்களின் குழுவினர்,மதுவிலக்கு அமல் பிரிவு (நுகெழசஉநஅநவெ றுiபெ) காவல் துறையினர், மாவட்ட மேலாளர்கள் மற்றும் வட்டாட்சியர்கள் தனித்தனியாக கள விசாரணை செய்து அறிக்கைச் சமர்ப்பிக்குமாறு அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும் கள்ளச்சாராயம் உற்பத்தி மற்றும் விற்பனையை செய்யப்படுவது மற்றும் கள்ளத்தனமாக மது விற்பணை (சந்துக்கடை) செய்யப்படுவது இனிவரும் காலங்களில் நடைபெறாமல் இருக்க அனைவரும் ஒருங்கிணைத்து ,செம்மையாக பணியாற்றுமாறு மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் அனைத்து அலுவலர்களுக்கும் அறிவுறுத்தினார்.

இதில் மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார், மாவட்ட ஆட்சியர் நேர்முக உதவியாளர் (பொது) வெங்கட்ராமன், உதவி ஆணையர் கலால் ரங்கராஜன், திருத்தணி வருவாய் கோட்டாட்சியர்கள் கற்பகம்(திருவள்ளூர்), தீபா(திருத்தணி), மாவட்ட மேலாளர் டாஸ்மாக்(கிழக்கு,மேற்கு) மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.