திருவள்ளூர் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை பெறும் மாற்றுத்திறனாளிகள் வாழ்நாள் சான்று பெற்று வழங்க வேண்டும் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

பதிவு:2024-06-25 19:06:53

திருவள்ளூர் ஜூன் 25 : திருவள்ளூர் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் வாயிலாக மனவளர்ச்சிகுன்றியோர், தசைசிதைவுநோயால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர், பார்கின்சன் நோய், நாள்பட்ட நரம்பியல் குறைபாடுடையோர் மற்றும் 75 சதவீதம் மற்றும் அதற்கு மேல் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்ட பல்வகை மாற்றுத்திறனாளிகள் 6247 நபர்கள் மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகையாக ரூ.2000 வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தின் வாயிலாக மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ரூ.2000 பெற்று வரும் 6247 பயனாளிகள் கிராம நிர்வாக அலுவலரிடம் வாழ்நாள் சான்று பெற்று வழங்க வேண்டும் - வழங்காத பயனாளிகள் ஜுலை 20 தேதிக்குள் மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை மற்றும் மருத்துவ சான்று, ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு புத்தகம்; மற்றும் யூடிஐடி கார்டு ஆகியவற்றின் நகல்களுடன், பாஸ்போர்ட் சைஸ் போட்டோவை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் பெற்றோர்,உறவினர்கள்,பாதுகாவலர் நேரில் (மாற்றுத்திறனாளிகள் வரவேண்டாம்) சமர்ப்பிக்க வேண்டும்.

மேலும் சமர்ப்பிக்க தவறும் பட்சத்தில் பராமரிப்பு உதவித்தொகை நிறுத்தம் செய்யபடும். இதுதொடர்பான விவரங்களுக்கு 044-27662985,9499933496-ல் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.