திருவள்ளூர் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட துவக்க விழா : அனைத்து விவசாயிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அழைப்பு

பதிவு:2022-05-20 09:44:54



திருவள்ளூர் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட துவக்க விழா : அனைத்து விவசாயிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அழைப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட துவக்க விழா : அனைத்து விவசாயிகளுக்கும் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் அழைப்பு

திருவள்ளூர் மே 20 : திருவள்ளூர் மாவட்டத்தில் 14 வட்டாரங்களில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் 80 கிராம பஞ்சாயத்துக்களான வடமதுரை, தாமரைப்பாக்கம், கன்னிகாபுரம், திருக்கண்டலம், கன்னிகைப்போ,; சூளைமேனி, கோடுவள்ளி, பெரியஓபுளாபுரம், ஆரம்பாக்கம், எளாவூர், சுண்ணாம்புகுளம், சித்தராஜகண்டிகை, நேமளுர், புதுகும்மிடிப்பூண்டி, மேலகழனி, வெங்கத்தூர், மப்பேடு, போலிவாக்கம், கூவம். தொடுகாடு, மேலூர், தடப்பெரும்பாக்கம், மெதூர், நாலூர், அத்திப்பட்டு, வாயலூர், ஆலாடு, கம்மார்பாளையம், எல்.அச்.குப்பம், நொச்சிலி, ராமசமுத்திரம், கொடிவாலசா, கீச்சலம், காட்டுப்பாக்கம், சென்னீர்குளம், அன்னம்பேடு, பட்டரைபெரும்புதூர், திருப்பாச்சூர், வெள்ளாத்துக்கோட்டை, திம்மபாலாபுரம், மெய்யூர், பூண்டி, அல்லிகுழி, தேவந்தவாக்கம், வடகரை, ஜி.எஸ்.கண்டிகை, அம்மையார்குப்பம், சந்தனவேணுகோபாலபுரம், மகான்காளிகாபுரம், வெடியங்காடு, நல்லூர், பாடியநல்லூர், விச்சூர், சோழவரம், அலமாதி, ஞாயிறு, கார்த்திகேயபுரம், வீரராகவபுரம், அலமேலுமங்காபுரம், செருகன்னூர், சிறுகுமி, சூர்யநகரம், நெமிலி, பொன்பாடி, வீரராகவபுரம், ஜாகீர்மங்கலம், முத்துகொண்டாபுரம், தாழவேடு, புட்லூர், செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு-87, வேப்பம்பட்டு-88, தொழுவூர், பெருமாள்பட்டு, காக்களுர், நத்தமேடு, வானகரம், அய்யாப்பாக்கம், பம்மதுகுளம் ஆகியவை 2021-2022-ம் ஆண்டில் தெரிவு செய்யப்பட்டு இத்திட்டம் செயல்படுத்த முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தினை தமிழக முதல்வர் 23.05.2022 திங்கட்கிழமை, காலை 10.00 மணியளவில் காணொளி காட்சி மூலம் துவக்கி வைக்க இருப்பதால் அன்றைய தினமே திருவள்ளூர் மாவட்டத்தில் ஆர்.கே.பேட்டை வட்டாரம், சந்தானவேணுகோபாலபுரம் கிராமத்தில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்,சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் இத்திட்டத்தினை துவக்கி வைத்து விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள், பயறுவகை விதைகள், கைத்தெளிப்பான்கள் மற்றும் விசைத்தெளிப்பான்கள், வீட்டு தோட்டம் அமைத்தல் தொகுப்புகள், தோட்டக்கலை பயிர் சாகுபடி ஊக்கத்தொகை வழங்குதல், நெகிழி கூடைகள், பழச்செடிகள் மற்றும் மரக்கன்றுகள்; போன்ற வேளாண் இடுபொருட்களை வழங்க உள்ளனர்.

எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் 80 கிராம பஞ்சாயத்துக்களில் உள்ள அனைத்து விவசாயிகளும் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் டாக்டர்.ஆல்பி ஜான் வர்கீஸ் அழைப்பு விடுத்துள்ளார்.இதேபோல் அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் அன்றைய தினம் முதல் வேளாண் இடுபொருட்கள் வழங்கப்பட உள்ளது. மேலும் ஒவ்வொரு கிராம பஞ்சாயத்துகளிலும் அனைத்து திட்டங்களும் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைந்து செயல்படுத்தப்படும்.

எனவே, விவசாயிகள் அந்தந்த கிராம பஞ்சாயத்து பொறுப்பு அலுவலர்களையும், சம்பந்தப்பட்ட வேளாண் விரிவாக்க மைய அலுவலர்களையும் தொடர்பு கொண்டு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்ட உதவிகளை பெற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.