செம்மண் கடத்தி மூன்று பேர் கைது

பதிவு:2024-06-25 19:13:07



செம்மண் கடத்தி மூன்று பேர் கைது

செம்மண் கடத்தி மூன்று பேர் கைது

சென்னை -

பூந்தமல்லி அருகே சட்டவிரோதமாக செம்மண் அள்ளிய வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து ஜேசிபி இயந்திரம் லாரிகளை பறிமுதல் செய்தனர் ,

திருவள்ளுர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த குத்தம்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட இருளப்பாளையம் பகுதியில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலத்தில் இன்று அதிகாலை 4 மணியளவில் ஜேசிபி இயந்திரம் உதவியுடன் சட்ட விரோதமாக செம்மண் அள்ளப்பட்டு வருவதாக வெள்ளவேடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைக்கப்பெற்றது.

அதைத்தொடர்ந்து சட்ட விரோதமாக செம்மண் அள்ளப்படும் இடத்திற்கு சென்ற போலீசார் போலீஸ் வருவதை கண்டு வாகனத்தை விட்டு தப்ப முயன்றவர்களை போலீசார் துரத்தி பிடித்து ஜேசிபி இயந்திரம் 2 லாரி மற்றும் அவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் குத்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ராஜ்குமார் வாகனங்கள் வைத்துக் கொண்டு இரவு நேரத்தில் அப்பகுதியில் தொடர்ந்து செம்மண் அள்ளி விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும்.

அவரின் ஜேசிபி லாரி வாகன ஓட்டுனராக குத்தம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த 35 வயது உடைய அஜித் குமார். படூர் மேடு பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய அஜித் என்பது தெரிய வந்தது

அதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் மத்திய புழல் சிறையில் அடைத்தனர்.