பொன்னேரி வட்டம் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய திருக்கோவிலில் பக்தர்களின் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் ஆய்வு :

பதிவு:2024-06-27 11:47:36



பொன்னேரி வட்டம் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய திருக்கோவிலில் பக்தர்களின் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் ஆய்வு :

பொன்னேரி வட்டம் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய திருக்கோவிலில் பக்தர்களின் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் ஆய்வு :

திருவள்ளூர் ஜூன் 26 : பொன்னேரி வட்டம் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய திருக்கோவிலில் பக்தர்களின் தேவையான அடிப்படை வசதிகள் குறித்து திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாசபெருமாள், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் ஆய்வு மேற்கொண்டு பேசினார்.

சிறுவாபுரி அருள்மிகு பாலசுப்பிரமணிய முருகன் கோயிலில் பக்தர்களின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும், கூட்டத்தை நெறிப்படுத்துவதற்காகவும் மேலும் பக்தர்களின் தேவைகளை அறிந்து அதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதற்காக நானும் மதிப்பிற்குரிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களும் இணைந்து இன்று ஆய்வு செய்துள்ளோம். குறிப்பாக போக்குவரத்தை சரி செய்து பக்தர்களின் வாகனங்களை நிறுத்துவதற்காகவும், பக்தர்கள் தங்குவதற்கான இடம், அவர்கள் ஓய்வு எடுப்பதற்கான இடம், அடிப்படை வசதிகளான குடிநீர் கழிவறை உள்ளிட்ட அனைத்து தேவைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் அடிப்படையில் இந்து சமய அறநிலைத்துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உடன் ஆலோசனை செய்து அதன்படி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட உள்ளது. ஒவ்வொரு செவ்வாய்க்கிழமையும் பக்தர்களின் வருகை அதிகரித்துக் கொண்டு உள்ளது அதன் காரணமாக கோயில் நிர்வாகத்துடன் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையும் இணைந்து அவர்களுக்கு உண்டான வசதிகளை செய்து கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம்.

மேலும் இங்கு உள்ள கடைகளை ஒழுங்குபடுத்துவதற்கும், சாலைகளை விரிவுபடுத்துவதற்கும் தேவைப்பட்டால் தனியார் நிலங்களை வாங்குவதற்கும், மினி பேருந்துகளை இயக்குவதற்கும் கூடிய விரைவில் நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளோம். இதன் காரணமாக பக்தர்களுக்கு ஒரு சிறப்பான தரிசன அனுபவத்தை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் தெரிவித்தார்.

இதில் ஊத்துக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் கணேஷ்குமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) ஆய்ஷ்குப்தா உதவி இயக்குனர் (ஊராட்சிகள்) பரணி, வேலூர் மண்டல துணை ஆய்வாளர் கருணாநிதி, உதவி கோட்ட பொறியாளர் (நெடுஞ்சாலை) பாலச்சந்தர், பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன், சிறுவாபுரி பாலசுப்பிரமணியன் திருக்கோயில் செயல் அலுவலர் கார்த்திகேயன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.