கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தில் 63 பேர் உயிரிழந்ததைக் கண்டித்து திருவள்ளூரில் ஒருங்கிணைந்த தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் :

பதிவு:2024-06-27 11:53:52

திருவள்ளூர் ஜூன் 26 : திருவள்ளூர் மருத்துவ கல்லூரி அருகே கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 63 பேர் உயிரிழந்தததை கண்டித்து ஒருங்கிணைந்த தேமுதிக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மேற்கு மாவட்ட செயலாளர் திருத்தணி டி.கிருஷ்ணமூர்த்தி, கிழக்கு மாவட்ட செயலாளர் கே.எம்.டில்லி, ஆவடி மாநகர மாவட்ட செயலாளர் நா.மு.சங்கர் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் தேமுதிக இளைஞர் அணி செயலாளரும், முன்னாள் எம்எல்ஏ.வுமான கு.நல்லதம்பி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

அப்போது 63 பேர் கள்ளச்சாராய சாவுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்த ஆர்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் திருவள்ளூர் மேற்கு மாவட்ட நிர்வாகிகள் ஆயில் கே. சரவணன் லயன் ஆர். சேகர், டி.கே. தியாகராஜன், கே.ஆர்.கிரி பாபு, பா. ரஜினிகாந்த், பாஸ்கர் ராஜ், ஒன்றிய நகர பேரூர் நிர்வாகிகள் எஸ்.மணிகண்டன், புதூர் ஜே. பாலாஜி, உள்ளாட்சி பிரதிநிதிகள் பிரபாவதி பாலாஜி, சத்யபிரியா முரளி கிருஷ்ணன், தரணி பாலாஜி, ஆர். உஷா ஸ்டாலின் உட்பட நூற்றுக்கு மேற்பட்ட நிர்வாகிகள் கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.