பதிவு:2024-06-27 12:09:19
மாற்றுத்திறனாளிகளுக்காக பணிபுரியும் அரசு சாரா நிறுவனங்கள் ஒரு மாதகாலத்திற்குள் பதிவுச் சான்று மற்றும் அங்கீகாரம் பெற வேண்டும் : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர் தகவல் :
திருவள்ளூர் ஜூன் 26 : திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்புக் கல்வி அளித்தல் இயன் முறை பயிற்சி அளித்தல், தொழிற்பயிற்சி அளித்தல் மற்றும் மறு வாழ்வு பணிகள் மேற்கொள்ளுதல் போன்ற பணிகளை அரசு சாரா நிறுவனங்கள் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம்- 2016 ன் படி பதிவுச் சான்று மற்றும் அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வருகிறது.
இது நாள் வரையில் மேற்கண்ட சட்டத்தின் படி பதிவுச் சான்று மற்றும் அங்கீகாரம் பெறாமல் இயங்கி வரும் மாற்றுத்திறனாளிகளுக்காக பணிபுரியும் ,அரசு சாரா நிறுவனங்கள் ஒரு மாதகாலத்திற்குள் பதிவுச் சான்று மற்றும் அங்கீகாரம் பெறவில்லையென்றால் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம்-2016 ன் படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு சாரா நிறுவனங்கள் தங்கள் விண்ணப்பங்கள் அடங்கிய கருத்துருவினை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரில் சமர்பித்து அரசுஅங்கீகாரம் மற்றும் பதிவுச் சான்று உடன் பெற்றிட திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.