பதிவு:2024-06-27 12:10:46
மாற்றுத்திறனாளிகள் நல திட்டத்தில் உதவி செய்கிறேன் அல்லது பெற்றுத் தருகிறேன் என்று கூறி தனிநபரோ, சங்கங்களோ அல்லது நிறுவங்களோ அணுகினால் புகார் தெரிவிக்கலாம்: திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர் தகவல் :
திருவள்ளூர் ஜூன் 26 : திருவள்ளூர் மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் திட்டம் அரசின் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினை மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்கிறேன் அல்லது பெற்றுத் தருகிறேன் என்று கூறிதனிநபரோ, சங்கங்களோ அல்லது நிறுவங்களோ பணம் அல்லது வேறு வகையில் ஆதாயம் பெறும் நோக்கில் செயல்பட்டால் மாற்றுத்திறனாளிகள் அல்லது அவர்களின் பெற்றோர், பாதுகாவலர்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செயல்படும் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் நேரடியாகவோ அல்லது 044-27662935,9499933496 என்ற அலுவலக தொலைபேசி எண்ணிலோ புகார்களை தெரிவிக்கலாம்.
இது தொடர்பான புகார்கள் வரப்பெற்றால் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் - 2016 ன் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.