பதிவு:2024-06-27 12:18:01
திருவள்ளூரில் சர்வதேச போதை பொருட்கள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் துவக்கி வைத்தார்
திருவள்ளூர் ஜூன் 27 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மற்றும் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு இணைந்து சர்வதேச போதை பொருட்கள் பயன்பாடு மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போதை பொருட்கள் பயன்பாட்டினை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாசபெருமாள், மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.இராஜ்குமார் ஆகியோர் முன்னிலையில் துவக்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலகு இணைந்து போதை பொருட்கள் பயன்பாட்டினை தடுத்தல் குறித்த விழிப்புணர்வு பேரணியினை இன்றைய தினம் துவக்கி வைக்கப்பட்டது. இப்பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்டு சென்னை திருத்தணி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்னை சில்க்ஸ் வரை சென்றது இப்பேரணியில் ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவியர்கள் தன்னார்வ தொண்டர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டு போதை பொருட்கள் எதிரான வாசகங்கள் அடங்கிய பதாகைகளுடன் , போதைப் பொருட்களுக்கு எதிரான வாசகங்களை முழக்கமிட்டு பேரணியில் சென்றார்கள்.
மேலும் திருவள்ளூர் மாவட்டத்தில் போதைப் பொருள் கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகள் முன்னெடுத்து வருகிறோம். அதன் அடிப்படையில் மாவட்டத்தில் 672.8 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளது மேலும் தடை செய்யப்பட்ட சட்டவிரோதமான பல்வேறு போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. என மாவட்ட ஆட்சியர் த. பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போதைப் பொருள்களுக்கு எதிரான உறுதி மொழியினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மாவட்ட வருவாய் அலுவலர் அவர்கள் முன்னிலையில் மாணவ மாணவியர்கள் தன்னார்வ ஆர்வலர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் ஏற்றுக்கொண்டார்கள். பின்னர் போதைப் பொருளுக்கு எதிராக கல்லூரி மாணவ மாணவியர்கள் மைமிங் பாடல்களுடன் நடைபெற்ற நாடகத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பார்வையிட்டார்கள். தொடர்ந்து போதைப் பொருட்களுக்கு எதிராக ரங்கோலி கோலம் வரையப்பட்டவற்ககும், மௌன மொழி (மைமிங்) நாடகத்தில்
பங்குபெற்றவற்களுக்கும் மேலும் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் போதைப் பொருட்கள் எதிரான வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு பதாகையினை வெளியிட்டு போதைப் பொருட்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வரையப்பட்ட ரங்கோலி கோலத்தினை பார்வையிட்டார்.
இதில் உதவி ஆட்சியர்(பயிற்சி) ஆயுஷ் குப்தா, உதவி ஆணையர் (கலால்) ரங்கராஜன், மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் அனுமந்தன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலர் நிஷாந்தினி, மாவட்ட நன்னடத்தை அலுவலர் சுதா, குழந்தைகள் நலக்குழு தலைவர் மேரி அக்சிலா, திருவள்ளூர் வட்டாட்சியர் வாசுதேவன், ஐ. ஆர். சி. டி. எஸ். தொண்டு நிறுவனத்தின் நிர்வாகச் செயலாளர் ஸ்டீபன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.