திருவள்ளூர் மாவட்டத்தில் உவர்நீர் இறால் வளர்ப்பு மேற்கொள்ள மானியங்கள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்

பதிவு:2022-05-20 09:47:15



திருவள்ளூர் மாவட்டத்தில் உவர்நீர் இறால் வளர்ப்பு மேற்கொள்ள மானியங்கள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்

திருவள்ளூர் மாவட்டத்தில் உவர்நீர் இறால் வளர்ப்பு மேற்கொள்ள மானியங்கள் : மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல்

திருவள்ளூர் மே 20 : திருவள்ளூர் மாவட்டத்தில் ஆர்வமுள்ள உவர்நீர் இறால் வளர்ப்பு விவசாயிகள் கடல்சார் நீர்வாழ் உயிரின வளர்ப்பு ஆணையம் சட்டம் 2005-ன் வழிகாட்டு நெறிமுறைகளுக்குட்பட்டு பிரதம மந்திரி மீன்வள மேம்பாட்டு திட்டத்தின் கீழ், உவர்நீர் இறால் வளர்ப்பு மேற்கொள்ள ஏதுவாக திட்டங்கள் செயல்படுத்தப்படவுள்ளது.

ஒரு ஹெக்டேர் புதிய உவர்நீர் இறால் பண்ணைகள் அமைத்திட ஆகும் செலவினதொகை ரூ.8 இலட்சத்தில் பொது பயனாளிக்கு 40 விழுக்காடு மானியம் ரூ.3.20 இலட்சம் மற்றும் மகளிர் பயனாளிக்கு 60 விழுக்காடு மானியம் ரூ.4.80 இலட்சம் மானியமாகவும் மற்றும் ஒரு ஹெக்டேர் உவர்நீர் இறால் பண்ணைகளுக்கு உள்ளீட்டு மானியம் ஆகும் செலவினத் தொகை ரூ.6 இலட்சத்தில் பொது பயனாளிக்கு 40 விழுக்காடு மானியம் ரூ.2.40 இலட்சம் மற்றும் மகளிர் பயனாளிக்கு 60 விழுக்காடு மானியம் ரூ.3.60 இலட்சம் மானியமாகவும் வழங்கப்படும்.

ஒரு ஹெக்டேர் உயிர் கூழ்ம திரள் (பயோபிளாக்) குளங்களில் உவர்நீர் இறால் பண்ணைகள் அமைத்திட ஆகும் செலவின தொகை ரூ.10 இலட்சத்தில் பொதுபயனாளிக்கு 40 விழுக்காடு மானியம் ரூ.4 இலட்சம் மற்றும் மகளிர் பயனாளிக்கு 60 விழுக்காடு மானியம் ரூ.6 இலட்சம் மானியமாகவும் மற்றும் ஒரு ஹெக்டேர் உயிர் கூழ்மதிரள் (பயோபிளாக்) குளங்களில் உவர்நீர் இறால் பண்ணைகளுக்கு உள்ளீட்டு மானியம் ஆகும் செலவினதொகை ரூ.8 இலட்சத்தில் பொது பயனாளிக்கு 40 விழுக்காடு மானியம் ரூ.3.20 இலட்சம் மற்றும் மகளிர் பயனாளிக்கு 60 விழுக்காடு மானியம் ரூ.4.80 இலட்சம் மானியமாகவும் வழங்கப்படும்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் உதவி இயக்குநர், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, திருவள்ளூர் (இருப்பு) பொன்னேரி எண்.05, சங்கர் நகர், பாலாஜி தெரு, வேண்பாக்கம், பொன்னேரி (தொலைபேசி எண்.044-27972457) அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.