திருவள்ளூரில் உள்ள மெட்பிளஸ் மருந்துக் கடையில் மாத்திரை வாங்க சென்றபோது தகாத வார்த்தைகளால் பேசிய கடை ஊழியர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கக்கோரி இயக்குனரும் நடிகருமான ராஜ்குமார் மாவட்ட கலெக்டரிடம் புகார் :

பதிவு:2024-06-27 12:26:43

திருவள்ளூர் ஜூன் 27 : திருவள்ளூர் வீட்டுவசதி வாரியகுடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர் டி.ராஜ்குமார். சன் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சியின் இயக்குனரும், தயாரிப்பாளருமான இவர் திருவள்ளூர் பூங்கா நகர் அப்பாசாமி சாலையில் உள்ள மெட் பிளஸ் மருந்துக் கடையில் நேற்று முன்தினம் 25-ஆம் தேதி இரவு 9.30 மணியளவில் மாத்திரை வாங்க சென்றுள்ளார்.

அப்போது அங்கு பணியில் இருந்து சுமார் 30 வயது மதிக்கத்தக்க நபரிடம் ஒரு குறிப்பிட்ட அளவு மாத்திரைகள் கேட்டுள்ளார். ஆனால் ஒரு அட்டையாகத் தான மாத்திரை தர முடியும் என்று கூறியுள்ளார். அதற்கு ராஜ்குமார், எனக்கு எவ்வளவு தேவையோ அவ்வளவு தான் வாங்க முடியும் என்று சொன்னதற்கு, கடை ஊழியர் தகாத வார்த்தைகளால் திட்டி வீண் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.

வாடிக்கையாளர்கள், பொது மக்கள் அதிகம் கூடக்கூடிய இடத்தில் தகாத வார்த்தைகளால் பேசி, மன உளைச்சலுக்கு ஆளாக்கிய மெட்பிளஸ் மருந்துக் கடையின் ஊழியர் மீதும் அந்த நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி திருவள்ளூர் தாலுக்கா காவல் நிலையம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனுவை ராஜ்குமார் அளித்துள்ளார்.சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.