பதிவு:2024-06-27 12:32:26
நீதியரசர் சந்துருவின் அறிக்கை மறைமுகமாக மதமாற்றத்தை ஊக்குவிப்பதாக உள்ளது என இந்து மக்கள் கட்சி தெய்வீக பேரவை சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் புகார் :
திருவள்ளூர் ஜூன் 27 : நீதியரசர் சந்துருவின் அறிக்கை மறைமுகமாக மதமாற்றத்தை ஊக்குவிப்பதாக உள்ளது என இந்து மக்கள் கட்சி தெய்வீக பேரவை சார்பில் மாநில தலைவர் வி. கார்த்திக் சிவம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார்.
அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: பள்ளி கல்லூரிகளில் சாதி அடையாளங்களை களைவதாக கூறி தமிழக அரசு நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப்பட்ட தனி நபர் விசாரணைக்குழு முதலமைச்சர் மு க ஸ்டாலின் இடம் அறிக்கையைஅளித்துள்ளது. இந்த தனிநபர் குழு அளித்துள்ள அறிக்கை முழுவதும் இந்து சமய நம்பிக்கையை சீர்குலைக்கும்வண்ணம் உள்ளது.
இந்து சமய நம்பிக்கை அடையாளமான காப்பு கயிறு கட்டுதல், திலகம் இடுதல், பூ வைத்தல் போன்றவைகளை தடை செய்திட வேண்டுமென அந்த அறிவிப்பில் தெரிவித்துள்ளது. எனவே நீதியரசர் சந்துருவின் அறிக்கை மறைமுகமாக மதமாற்றத்தை ஊக்குவிப்பதாக உள்ளது. மாற்று மதத்தைச் சார்ந்தவர்கள் தங்களின் மத அடையாளமான சிலுவை, ஹிஜாப் போன்றவர்கள் பற்றி அரசுக்கு அளித்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சமுதாயத்தில் அடையாளங்கள் மட்டும் நீக்க வலியுறுத்துவது கண்டிக்கத்தக்கது.
அதே நேரத்தில் பள்ளி கல்வித்துறை பாடநூல் கழகம் சார்பில் நடப்பாண்டு வெளியிட்டுள்ள மூன்றாம் வகுப்பு தமிழ் பாடத்தில் அனைவரும் கைகோர்த்து சம ரீதியாக நிற்பது போன்ற புகைப்படத்தில் இஸ்லாமிய மத அடிப்படை அடையாளச் சின்னங்கள் மற்றும் இடம் பெற்றுள்ளது. மீதமுள்ள குழந்தைகளின் சமய அடையாளங்கள் நீக்கப்பட்டுள்ளது கண்டிக்கத்தக்கது எனவும் அந்த புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த பாடத்திட்டத்தில் இருந்து அந்த பகுதியை நீக்க வேண்டும். மதரீதியாக ஜாதி ரீதியாக பிளவுபடுத்தக்கூடிய நீதிபதி சந்துரு விசாரணைக்குழு அளித்துள்ள அறிக்கையை தமிழக அரசும் பள்ளிக் கல்வித் துறையும் ஏற்கக் கூடாது எனவும் நடைமுறை படுத்துவதை தடை செய்திட வேண்டும் என அந்த புகார் மனுவில் தமிழக இந்து மக்கள் கட்சி தெய்வீகப் பேரவை சார்பில் மாநில தலைவர் வி. கார்த்திக் சிவம் தெரிவித்துள்ளனர்.