திருத்தணி அருகே தமிழக எல்லையில் போலீஸ் சோதனை சாவடி வழியாக ஆந்திராவிலிருந்து 22 கிலோ கஞ்சா கடத்தி வந்த மூன்று வாலிபர்கள் கைது :

பதிவு:2024-06-27 12:36:06

திருவள்ளூர் ஜூன் 27 : திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே சென்னை திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் தமிழக எல்லையில் பொன்பாடி போலீஸ் சோதனைச் சாவடியில் இன்று காலை 9 மணியளவில் மத்திய படை உளவுத்துறை சென்னை பிரிவு ஆய்வாளர் அன்பரசி தலைமையிலான போலீசார் ஆந்திராவில் இருந்து வரும் வாகனங்களை கடுமையான முறையில் சோதனை மேற்கொண்டனர்

அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இரண்டு விலை உயர்ந்த இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர்களை மடக்கி சோதனை செய்யும் பொழுது அவர்கள் பைகளில் மறைத்து வைத்திருந்த கஞ்சா என்பதை உறுதி செய்து அந்த மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர். திருத்தணி ஆர்.கே. பேட்டை மதுவிலக்கு காவலாளர் விஜயலட்சுமியிடம் குற்றவாளியையும் பறிமுதல் செய்த 22 கிலோ கஞ்சா மற்றும் இரண்டு இரு சக்கர வாகனத்தையும் ஒப்படைத்தனர்.

இதன் அடிப்படையில் மேற்கொண்ட தீவிர விசாரணையில் அவர்கள் ஆந்திர மாநிலம் புத்தூர் பகுதியைச் சேர்ந்த விஜயன்(42) வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த பிரவீன் (25) மற்றும் ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கத்தைச் சேர்ந்த வெங்கட் (23) என்பது தெரியவந்தது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட இவர்களிடமிருந்து 22 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் விலை உயர்ந்த இரண்டு இருசக்கர வாகனங்களும் பறிமுதல் செய்து 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து திருத்தணி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின் பேரில் சிறையில் அடைத்தனர்.