தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை தரக்குறைவாக பேசியதாக கூறி மாவட்ட கலெக்டரை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து ஆசிரியர்கள் போராட்டம் :

பதிவு:2024-07-02 10:57:22



தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை தரக்குறைவாக பேசியதாக கூறி மாவட்ட கலெக்டரை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து ஆசிரியர்கள் போராட்டம் :

தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களை தரக்குறைவாக பேசியதாக கூறி மாவட்ட கலெக்டரை கண்டித்து கருப்பு பேட்ஜ் அணிந்து ஆசிரியர்கள் போராட்டம் :

திருவள்ளூர் ஜூலை 02 : திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 60 சதவீதத்திற்கும் குறைவான மாணவர்கள் தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் பாட ஆசிரியர்கள் இதில் கலந்துகொண்டனர். 24 பள்ளிகளை சேர்ந்த 125-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் இதில் கலந்து கொண்டனர்.

அப்போது 60 சதவீதத்திற்கும் குறைவான தேர்ச்சி விகிதம் பெற்ற ஆசிரியர்களை தரக் குறைவான வார்த்தைகளால் விமர்சித்ததாக கூறப்படுகிறது. நீங்கள் எதற்கும் லாயக்கில்லை. பள்ளி தலைமை ஆசிரியராக நான் இருந்திருதால் மாடி மேலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டிருப்பேன்.கண்ணாடி முன் நின்று உங்கள் முகத்தில் நீங்களே காரி துப்பி கொள்ளுங்கள் என்றும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களை தரக்குறைவாக விமர்சித்ததாக கூறப்படுகிறது.

மேலும் என்னை பற்றி யாரிடம் சொன்னாலும் எனக்கு அதைப் பற்றி கவலை இல்லை.. போஸ்டர் அடித்து ஓட்டினாலும் , கூட்டங்கள் போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினாலும் நான் கவலைப்பட போவதில்லை எனவும் ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளார்.

எனவே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.மேலும் இந்தப் போராட்டம் வலுப்பெறும் என்றும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு வழக்கறிஞர்களை தரக்குறைவாக பேசியதால் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் நடத்தியதும் அதனைத் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தியதும் குறிப்பிடத்தக்கது.