பதிவு:2022-05-21 21:47:30
திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் பகுதியில் தமிழக ஆன்மீக விழிப்புணர்வு மன்ற உதயம் வெல்பர் பவுண்டேசன் சார்பாக இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது.
திருவள்ளூர் மே 21 - தமிழக ஆன்மீக விழிப்புணர்வு மன்ற உதயம் வெல்பர் பவுண்டேசன் மற்றும் மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு மையம் சென்னை சங்கர நேத்ராலயா இணைந்து நடத்திய இலவச கண்புரை நீக்கும் அறுவை சிகிச்சைக்கான தேர்வு முகாம் திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் வெங்கத்தூர் கண்டிகை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இந்த முகாமிற்கு தமிழக ஆன்மிக விழிப்புணர்வு மன்ற உதயம் வெல்பர் பவுண்டேசன். நிறுவனர் மற்றும் தலைவர் சுபாஷ் அவர்கள் தலைமையேற்று நடத்தினர். சிறப்பு அழைப்பாளர்களாக பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணை தலைவர் பாலா என்கிற பாலயோகி மற்றும் கடம்பத்தூர் ஒன்றிய குழு உறுப்பினர்கள் நா..வெங்கடேசன், யோகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு கண் சிகிச்சை முகாமினை சிறப்பித்தனர்.
தமிழக ஆன்மிக விழிப்புணர்வு மன்ற உதயம் வெல்பர் பவுண்டேசன் துணைத் தலைவர் டாக்டர் தேவா, சிவ பழனி, ஆறுமுகம் உறுப்பினர்கள் சந்தானம் பாலாஜி பார்த்திபன் சக்திவேல் சேசாத்திரி
கதிர்வேல் சந்தோஷ் தேவராஜ் அஜித் யுவனேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
பொதுமக்கள் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து கண் சிகிச்சை முகாமில் பங்கேற்று பயன்பெற்றனர்.