திருவள்ளூரில் நம்ம பள்ளி நம்ம ஊர் பள்ளி திட்டத்தின் கீழ் அரசு பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை பெறுவதற்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

பதிவு:2024-07-03 11:21:18



திருவள்ளூரில் நம்ம பள்ளி நம்ம ஊர் பள்ளி திட்டத்தின் கீழ் அரசு பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை பெறுவதற்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

திருவள்ளூரில் நம்ம பள்ளி நம்ம ஊர் பள்ளி திட்டத்தின் கீழ் அரசு பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை பெறுவதற்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம்

திருவள்ளூர் ஜூலை 03 : திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நம்ம பள்ளி நம்ம ஊர் பள்ளி திட்டத்தின் கீழ் தனியார் தொழிற்சாலை நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து அரசு பள்ளிக்கு தேவையான அடிப்படை வசதிகளை பெறுவதற்கான ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் இத்திட்டத்தின் மூலம் பள்ளிகளின் உட்கட்டமைப்பு, தற்காலிக ஆசிரியர்கள் நியமித்தல், கல்வி உபகரணங்கள், தளவாடப் பொருட்கள், விளையாட்டு உபகரணங்கள், புத்தகங்கள் ஆகியவை வழங்குவதற்கு உங்கள் நிறுவனங்களில் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து வழங்கி அரசு பள்ளி மற்றும் சமூக நலத்துறையின் கீழ் செயல்படும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம் பணிகள் செயல்படுத்தப்படும் அங்கன்வாடி மையங்களை மேம்படுத்த வேண்டும். உயர்கல்வியில் 53 சதவீதமும் பள்ளிக் கல்வியில் 100% உள்ள மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது. அதன் அடிப்படையில் தான் தமிழ்நாடு முதலமைச்சர் அரசு பள்ளியை மேம்படுத்தும் வகையில் நம்ம பள்ளி நம்ம ஊரு பள்ளி திட்டத்தினை துவக்கி வைத்துள்ளார். ஆகையால் தனியார் தொழிற்சாலை நிறுவனங்கள் தங்களின் சமூக பொறுப்பு நிதியினை அரசு பள்ளி மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு வழங்குவதற்கு முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபு சங்கர் அறிவுறுத்தினர்.

கூட்டத்தில் உதவி ஆட்சியர்(பயிற்சி) ஆயுஷ் குப்தா, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன் (திருவள்ளூர்) திரு. லிவிங்ஸ்டன் (கும்மிடிப்பூண்டி), மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் லலிதா, நம்ம பள்ளி நம்ம ஊரு பள்ளி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் அஜித் டேனியல், ஹேமந்த், தனியார் தொழிற்சாலை நிறுவனர்கள், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.