பதிவு:2024-07-03 11:24:05
திருத்தணி , பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு உட்பட்ட 9 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்ட பணிகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு :
திருவள்ளூர் ஜூலை 03 : தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெளியகரம் ஆற்றுப் படுக்கையில் கிணறுகள் அமைத்து குழாய் மூலம் திருத்தணி , பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு உட்பட்ட 9 கிராமங்களுக்கு குடிநீர் வழங்கும் திட்ட பணிகள் நடைபெற்று வருவதை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பேசினார்.
பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வெளியகரம் ஆற்றுப்படுகையில் கிணறுகள் அமைத்து அதன் மூலம் குழாய்கள் மூலம் திருத்தணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட எஸ். கார்த்திகேயபுரம், கன்னிகாபுரம், தாடூர், சிறுகனூர், எஸ். அக்ரஹாரம் பள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட சி .எஸ். கண்டிகை, வங்கனூர், செல்லத்தூர் வி .எஸ். ஜி .புரம் ஆகிய கிராமங்களுக்கு நாள்தோறும் 2.76 மில்லி லிட்டர் குடிநீர் வழங்கும் திட்டப் பணிகளை பார்வையிட்டு இத்திட்டம் குடிநீர் ஆதாரத்திற்க்கான சிறப்பான திட்டம் இத்திட்டத்தினால் 9 கிராம மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்கும் என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்தார்.
இதில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் செயற்பொறியாளர் அமலதீபன், உதவி பொறியாளர் சம்பத்குமார், உதவி நிர்வாக பொறியாளர் ஜெயசுதா, திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா, நீர்வள இளநிலை பொறியாளர் சுந்தரன், உதவி செயற்பொறியாளர் விஸ்வநாதன், உதவி பொறியாளர் அகிலன் பள்ளிப்பட்டு வட்டாட்சியர் சிவகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.