பதிவு:2024-07-03 11:27:17
எறையாமங்கலம் ஊராட்சியில் தண்ணீர் டேங்கில் காக்கா இறந்து கிடப்பதால் மாற்று ஏற்பாடு செய்ய கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை :
திருவள்ளூர் ஜூலை 03 : திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம் எறையா மங்கலம் ஊராட்சியில் ஆயிரத்துக்கு மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். கிராம மக்களுக்கு அங்குள்ள குடிநீர் டேங்க் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த டேங்கில் குரங்குகள் விளையாடுவதும் காக்காக்கள் தண்ணீரில் மூழ்கி விளையாடுவது வழக்கம். அது குறித்து பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இந்நிலையில் அந்த டேங்கில் இரண்டு காக்காக்கள் இறந்தகிடப்பதாகவும் இரண்டு நாட்கள் தண்ணீர் பிடிக்க வேண்டாம் எனவும் பம்ப் ஆப்ரேட்டர் தெரிவித்துள்ளார். இதனையடுத்து இன்று காலை 11 மணி அளவில் நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கிராம மக்கள் குடிநீர் டேங்கில் இறந்து கிடக்கும் காக்காக்களை அகற்றிவிட்டு சுத்தம் செய்து மீண்டும் குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து தற்காலிகமாக அருகில் உள்ள நுங்கம்பாக்கம் கிராமத்தில் இருந்து பைப்லைன் மூலம் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்தது போல் மீண்டும் வழங்க உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதனால் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.