மதுரவாயலில் உரக்கடை, கார் ஷெட் என அடுத்தடுத்து நான்கு கடைகளில் பயங்கர தீ விபத்து :

பதிவு:2024-07-03 11:31:51

மதுரவாயலில் உரக்கடை, கார் ஷெட் என அடுத்தடுத்து நான்கு கடைகளில் பயங்கர தீ விபத்து :

மதுரவாயலில் உரக்கடை, கார் ஷெட் என அடுத்தடுத்து நான்கு கடைகளில் பயங்கர தீ விபத்து :

திருவள்ளூர் ஜூலை 03 : பூந்தமல்லி அடுத்த மதுரவாயல் மின்வாரிய அலுவலகம் அருகே தனியாருக்கு சொந்தமான உரக்கிடங்கு அமைந்துள்ளது. இதன் அருகிலேயே கார் ஷெட் மற்றும் ஹோட்டல்கள் அமைந்துள்ள நிலையில் திடீரென உரக்கிடங்கிலிருந்து பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில் தீயானது அருகில் இருந்த கார் ஷெட், ஹோட்டல் உள்ளிட்ட கடைகளுக்கு பரவிய நிலையில் 4 கடைகளில் தீப்பிடித்து எறிய ஆரம்பித்தது.

இதையடுத்து பூந்தமல்லி, மதுரவாயல் கோயம்பேடு ஆகிய பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்த தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர் தீயானது கொழுந்துவிட்டு எரிந்து வருவதால் தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர்.

தற்போது உரக்கிடங்கு, டயர் கடை கார் ஷெட் ஹோட்டல் என நான்கு கடைகளில் பயங்கர தீ விபத்தால் அந்த பகுதியில் புகை மண்டலமாக காட்சியளித்து வருகிறது. இரண்டு மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுப்படுத்தினர்.