பதிவு:2024-07-03 11:36:33
திருத்தணி அருகே மது போதையில் செல்போன் டவர் மீது ஏறி குழந்தையுடன் ரகளையில் ஈடுபட்ட நபரை சுமார் 6 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் போலீசார் பாதுகாப்பாக மீட்டனர் :
திருவள்ளூர் ஜூலை 03 : திருவள்ளூர் மாவட்டம் பொதட்டூர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் முருகன். குடும்ப பிரச்சினை காரணமாக இருந்து வந்த நிலையில் 7 வயது மகனுடன் அதே பகுதியில் உள்ள செல்போன் டவர் ஏறி தற்கொலை முயற்சி செய்தார். சம்பவ இடத்துக்கு சென்று போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் முருகனை கீழே இறக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
டவர் மீது ஏறிய முருகன் நள்ளிரவு ஒரு மணி வரை கீழே இறங்காமல் போலீசருக்கு தண்ணி காட்டி வந்தார். முதலில் பாதுகாப்பாக குழந்தையை மீட்ட போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர் மற்றும் வருவாய் துறையினர் பின்னர் முருகனை நள்ளிரவு 1 மணி அளவில் மீட்டு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே பத்திரிகையாளர்கள் வந்தால் தான் கீழே இறங்குவதாக கூறிய முருகன் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் அப்போது அங்கு சென்ற தனியார் தொலைக்காட்சி செய்தியாளர் முருகனிடம் சமரசம் பேச டவர் ஏறும் பொழுது மேலே இருந்து ஒரு இரும்பு கம்பியை கீழே போட்டதாக கூறப்படுகிறது. இதில் தலையில் காயமடைந்த செய்தியாளருக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.