திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் குரூப் 2, குரூப் 2ஏ முதன்மை தேர்வுக்காகன இலவச பயிற்சி வகுப்புகள் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

பதிவு:2024-07-03 11:39:47

திருவள்ளூர் ஜூலை 03 : வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் 38 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக TNPSC, TNUSRB மற்றும் TRB போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இப்பயிற்சி வகுப்புகளின் மூலம், பயிற்சி பெற்ற மாணவ,மாணவியர்கள் போட்டித் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பல்வேறு அரசு வேலைவாய்ப்பினைப் பெற்றுள்ளனர். தற்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 தேர்விற்கு 507 காலிப்பணியிடங்களும், குரூப் 2ஏ தேர்விற்கு 1820 காலிப்பணியிடங்களும் ஆக மொத்தம் 2327 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு 20.06.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது.

இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்.19.07.2024 ஆகும். டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, குரூப் 2ஏ முதன்மை தேர்வுக்காகன இலவச பயிற்சி வகுப்புகள் 04.07.2024 அன்று காலை 10.30 மணிக்கு திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் துவக்கப்படவுள்ளது. இப்பயிற்சி வகுப்புக்கு சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்படுவதுடன் இலவச மாதிரி தேர்வுகளும் மாநில அளவிலான முழுமாதிரி தேர்வுகளும் நடத்தப்படவுள்ளது. மேலும் விவரங்களுக்கு 9789714244, 8270865957 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

இந்த இலவச பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள விருப்பமுள்ள திருவள்ளூர் மாவட்டத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் தேர்வுக்கு விண்ணப்பம் செய்த நகலுடன் இரு பாஸ்போர்ட் சைஸ் அளவுள்ள புகைப்படம் இணைத்து திருவள்ளூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திற்கு நேரில் வருகைபுரிந்து பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு பயனடையுமாறு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்