பதிவு:2024-07-03 11:41:45
ஜகனாதபுரம் கிராமத்தில் இருளிப்பட்டு குக்கிராமத்தினை ஜகனாதபுரத்துடன் இணைப்பது குறித்து வரும் 10 ம் தேதி கருத்து கேட்கும் கூட்டம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :
திருவள்ளூர் ஜூலை 03 : திருவள்ளூர் வருவாய் மாவட்டம் மற்றும் திருவள்ளூர் பதிவு மாவட்டத்தில் உள்ள ஆரணி சார்பதிவகத்தில் உள்ள இருளிப்பட்டு குக்கிராமத்தினை திருவள்ளூர் பதிவு மாவட்டம் பொன்னேரி சார்பதிவகத்தில் உள்ள முதன்மை கிராமமான ஜகனாதபுரத்துடன்(II) இணைப்பது குறித்து ஜகனாதபுரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில், மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தலைமையில் கருத்து கேட்கும் கூட்டம் 10.07.2024 அன்று 11 முற்பகல் மணியளவில் நடைபெற உள்ளது.இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கருத்தினை தெரிவிக்கலாம்.
குக்கிராமம் அமைந்துள்ள சார்பதிவகம்/ கிராமம் அரணி சார்பதிவாளர் அலுவலகம்/ இருளிப்பட்டு கிராமம்./சர்வே எண்.162 முதல் 212 வரை,தற்போது இணைக்கப்பட உள்ள குக்கிராம சார்பதிவகம்/ கிராமம் பொன்னேரி சார்பதிவாளர் அலுவலகம்/ ஜெகனாதபுரம்(II) கிராமம்./ சர்வே எண்.162 முதல் 212 வரை என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.