அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் நலிவுற்ற தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான விண்ணப்பங்களை முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணாவிடம் வழங்கினர் :

பதிவு:2024-07-08 13:55:56

திருவள்ளூர் ஜூலை 08 : அண்ணா தொழிற்சங்க பேரவை சார்பில் ஆண்டுதோறும் நலிவுற்ற போக்குவரத்து தொழிலாளர்களுக்கு ஒரு லட்சம் வீதம் அதிமுக சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டிற்கான நலிவுற்ற தொழிலாலர்களிடமிருந்து அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் அறிவுறுத்தலின் பேரில் விண்ணப்பம் பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் அண்ணா தொழிற்சங்க கைத்தறிப்பிரிவு மாநில செயலாளர் கே.ஜே.லெனின், அனைத்து மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி அண்ணா பணியாளர் சங்கத்தின் செயலாளர் ஆர்.குப்புசாமி முன்னிலையில் மனுக்கள் பெறப்பட்டது. திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பி.வி.ரமணா மனுக்களைப் பெற்றார். திருவள்ளூர் வடக்கு, மத்தியம், தெற்கு, கிழக்கு, மேற்கு என 5 மாவட்டங்களில் தலா 2 பேர் வீதம் 10 பேரிடமிருந்து அந்த மனுக்கள் பெறப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் மண்டல பொருளாளர் வேணுகோபால், திருவள்ளூர் மேற்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் குப்புசாமி, மண்டல தலைவர் வெங்கடபதி, மாவட்ட தலைவர் காளிதாஸ், இணை செயலாளர் பாலமுருகன், பணிமனை இணை செயலாளர் வெங்கடேசன், பணிமனை செயலாளர் சண்முகம் உள்பட அண்ணா தொழிற்சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.