திருவள்ளூர் அடுத்த காக்களூரில் உள்ள ஸ்ரீசஞ்சீவிராயர் (என்கிற) ஸ்ரீவீர ஆஞ்சநேய சுவாமி திருக்கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் :

பதிவு:2024-07-08 13:59:26

திருவள்ளூர் ஜூலை 08 : திருவள்ளூர் அடுத்த காக்களூரில் உள்ள ஸ்ரீசஞ்சீவிராயர் (என்கிற)ஸ்ரீவீர ஆஞ்சநேய சுவாமி திருக்கோயிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று 6-ஆம் தேதி காலை 7.30 மணிக்கு பிரார்த்தனை, அனுக்ஞை, சங்கல்பம், கணபதி பூஜை, புன்யாஹவாசனம், கலச பூஜை, யாகசாலை பிரவேசமும் ஸ 9 மணிக்கு கலச ஸ்தாபனம், நவக்ரஹ வாஸ்துபூஜை, மஹா கணபதி ஹோமம், வாஸ்துஹோமம், பவமான ஹோமம், விஷ்ணுகாயத்ரி ஹோமம் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து பிற்பகல் 12 மணிக்கு மஹா நைவேத்தியம், தீபாராதனையும், அஷ்டபந்தன பூஜையும், மாலை 5 மணிக்கு அஷ்டபந்தன பூஜை, கோ பூஜையும், 6 மணிக்கு அஷ்டபந்தனம் சாற்றுதல், வேத பாராயணம், ஸ்வஸ்தி வாசனம், தீபாராதனை நிகழ்ச்சியும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து இன்று காலை 6 மணிக்கு யாகசாலை பூஜை, தன்வந்திரி, வாய்ஸ்துதி ஹோமங்கள் நிகழ்ச்சியும் காலை 9 மணிக்கு யாத்ராதானம், பலி பிரதானம் ,மஹா பூர்ணாஹூதியும், தீபாராதனையும், ஸ்ரீவீர ஆஞ்சநேய ஸ்வாமிக்கு சன்னிதானத்தில் சம்ப்ரோஷன கலசாபிஷேகமும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து 9.30 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் மஹா கும்பாபிஷேகமும் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் காக்களூர், புட்லூர், தண்ணீர்குளம், திருவள்ளூர், பூங்காநகர், பெரியகுப்பம் உள்பட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்து ஸ்ரீசஞ்சீவி ராயர் என்கிற ஸ்ரீவீர ஆஞ்சநேய சுவாமியை தரிசனம் செய்துவிட்டு சென்றனர்.