திருவள்ளூர் மாவட்டத்தில் தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாட்டு வாரம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

பதிவு:2024-07-08 14:08:52



திருவள்ளூர் மாவட்டத்தில் தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாட்டு வாரம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

திருவள்ளூர் மாவட்டத்தில் தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் மேம்பாட்டு வாரம் : மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தகவல் :

திருவள்ளூர் ஜூலை 08 : தமிழ்நாடு அரசின் அரசாணையில் ஆணையிடப்பட்டதின் அடிப்படையில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் அவர்களின் அறிவுறுத்தலின் படி தமிழ்நாடு முழுவதும் உள்ள 38 மாவட்டங்களில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் வாயிலாக மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து ஜீலை 2-வது வாரத்தில் (09.07.2024- மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சியும்.

10.07.2024- மகளிருக்கான தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சியும், 11.07.2024-பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியருக்கான தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சியும், 12.07.2024- பள்ளி ஃ கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியும், 15.07.2024 அரசினர் தொழிற்பயிற்சி நிலைய மாணவர்கள் மற்றும் பாலிடெக்னிக் மாணவர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டும் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சியும்) ஆகிய நாட்களில் தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வாரம் தொடர்பான நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

மேற்கூறியவாறு மாவட்ட வேiலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து நடைபெறும் தொழில்நெறி விழிப்புணர்வு மற்றும் திறன் வார நிகழ்ச்சிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு என மாவட்ட ஆட்சியர் த.பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.