பதிவு:2024-07-08 14:10:28
இருளிப்பட்டு குக்கிராமத்தினை ஜகனாதபுரத்துடன் இணைப்பது குறித்து கலெக்டர் தலைமையில் ஜூலை 10-ல் ஆலோசனை கூட்டம் :
திருவள்ளூர் ஜூலை 08 : திருவள்ளூர் வருவாய் மாவட்டம் மற்றும் திருவள்ளூர் பதிவு மாவட்டத்தில் உள்ள ஆரணி சார் பதிவகத்தில் உள்ள இருளிப்பட்டு குக்கிராமத்தினை திருவள்ளூர் பதிவு மாவட்டம் பொன்னேரி சார் பதிவகத்தில் உள்ள முதன்மை கிராமமான ஜகனாதபுரத்துடன் இணைப்பது குறித்து ஜகனாதபுரம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில், மாவட்ட கலெக்டர் தலைமையில் கருத்து கேட்கும் கூட்டம் ஜூலை 10 -ஆம் தேதி 11 மணியளவில் நடைபெற உள்ளது.
ஆரணி சார்பதிவாளர் அலுவலகம் இருளிப்பட்டு கிராமம், சர்வே எண்.162 முதல் 212 வரை பொன்னேரி சார்பதிவாளர் அலுவலகம், ஜெகனாதபுரம் (II) கிராமம், சர்வே எண்.162 முதல் 212 வரை இணைக்கப்பட உள்ளது. கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கருத்தினை தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் த.பிரபு சங்கர் தெரிவித்துள்ளார்.