பதிவு:2024-07-09 12:29:48
திருவள்ளூரில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற விழிப்புணர்வு பேரணி : மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பெ.ரவிசந்திரன் துவக்கி வைத்தார் :
திருவள்ளூர் ஜூலை 09 : திருவள்ளூர் ஆர்.எம்.ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை மற்றும் செய்தி மக்கள் தொடர்புத் துறை இணைந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற மாணவியர்கள் பங்கு பெற்ற விழிப்புணர்வு பேரணியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பெ.ரவிசந்திரன் துவக்கி வைத்தார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்று பள்ளி மாணவியர்கள் பங்கு பெற்ற விழிப்புணர்வு பேரணியானது ஆர் எம் ஜெயின் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் இருந்து புறப்பட்டு நகரின் முக்கிய பகுதி வழியாக பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி மீண்டும் பள்ளி வளாகத்திற்கு வந்தடைந்தது.
இப்பேரணியில் 300-க்கும் மேற்பட்ட மாணவியர்கள் பங்கு பெற்று பெண் கல்வியின் வளர்ச்சி நாட்டின் மறுமலர்ச்சி !, மகிழ்வோம் மகிழ்வோம் பெண் கல்வியால் மகிழ்வோம்!, தடுப்போம் தடுப்போம் குழந்தை திருமணத்தை தடுப்போம்! சாதிப்போம், சாதிப்போம் பெண் கல்வியால் சாதிப்போம்! என்று பதாகைகள் ஏந்தி முழக்கமிட்டு சென்றார்கள். முன்னதாக பெண் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான மாணவிகளின் பேச்சுப்போட்டி நடைபெற்றது.
இதில் மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் சுகானந்தம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கருப்பணராஜவேல், முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் செந்தில்குமார், ஆர்.எம் .ஜெயின் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் செல்வி மற்றும் ஆசிரியர்கள், மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.