பதிவு:2024-07-09 12:38:02
கவுண்டர் பாளையம் ஊராட்சியில் ஏரிக்கரையை உடைத்து மணல் திருடும் கொள்ளையர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு :
திருவள்ளூர் ஜூலை 09 : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கவுண்டர் பாளையம் ஊராட்சியில் 500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். எங்கள் கிராமத்தில் உள்ள கோவிலுக்கு சொந்தமான கோவில் இடம் உள்ளது. இந்த நிலத்தில் வெள்ளம் ஏற்பட்ட காலத்தில் எங்களுக்கு ஊருக்குள் வராத அளவிற்கு பனை மரங்களுடன் கூடிய ஏரிக்கரை உள்ளது . இந்த ஏரி கரையில் மணல் கொள்ளையர்கள் அடிக்கடி மணலை திருடிச் செல்வதாக ஏரிக்கரை உடைபட்டு கொசஸ்தலை ஆற்று வெள்ள நீர் சீமாவரம் மதகுகள் வழியாக ஊருக்குள் புகுந்து விடுகின்றன.
இதனால் கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வீடுகளை இழந்து சாலை ஓரங்களில் தேங்கும் அவல நிலை உள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் எங்கள் கிராமத்தில் மழை காலங்களில் வெள்ள நீர் வருவதால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும் வெள்ள நீர் வீட்டுக்குள் வருவதால் வீட்டு உபயோகப் பொருட்கள் மற்றும் மாணவர்களின் புத்தகங்கள் மற்றும் சான்றிதழ் உட்பட அனைத்தும் வெள்ள நீரில் மூழ்கி வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் தவித்து வருகிறோம். எனவே மணல் கொள்ளையை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் எங்கள் ஏரியை பாதுகாக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் கவுண்டர்பாளையம் சமூக ஆர்வலர்கள் மற்றும் கிராம மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.