பதிவு:2024-07-09 12:45:01
ஈக்காட்டில் அரசாணை 243-ஐ ரத்து செய்தல் உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோ ஜாக் சார்பில் வட்டார கல்வி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் :
திருவள்ளூர் ஜூலை 09 : திருவள்ளூர் அடுத்த ஈக்காட்டில் உள்ள வட்டார கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் மு மகாலட்சுமி தலைமை தாங்கினார். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகி வாசுதேவன், வட்டார செயலாளர் பரமசிவம், நகர தலைவர் மோதி பாபு, பாலசுந்தரம் திலகவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளரும் டிட்டோ ஜாக் உயர்மட்டக்குழு உறுப்பினருமான இரா. தாஸ் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசாணை 243-ஐ ரத்து செய்ய வேண்டும். மாநில சீனியாரிட்டியை ரத்து செய்து ஒன்றிய சீனியாரிட்டியை முறையை நடைமுறைப்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாடுகளை நீக்கிட வேண்டும் என்பது உள்பட 31 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.