பதிவு:2024-07-09 12:50:06
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களிலும் வரும் 13 ம் தேதி குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான குறைதீர் முகாம் : மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தகவல் :
திருவள்ளூர் ஜூலை 09 : உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையாளர் அவர்களின் சுற்றறிக்கையில், பிரதி மாதம் இரண்டாவது சனிக்கிழமைகளில் ஒவ்வொரு வட்டங்களிலும், பொது விநியோகத்திட்ட குறைதீர் முகாம்கள் நடத்தப்படவேண்டும் என்ற அறிவுரைகளின் படி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒன்பது வட்டங்களிலும், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் தொடர்பான குறைதீர் முகாம், 13.07.2024 தேதி சனிக்கிழமை அன்று வட்ட அளவில், வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெறவுள்ளது.
மேற்படி வட்ட அளவில் நடைபெறும் குறைதீர் முகாமில் பொதுமக்கள் தங்கள் மின்னனு குடும்ப அட்டையில் திருத்தங்கள் மற்றும் புகைப்படம் பதிவு செய்தல் தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன் பெறலாம்.
மேலும் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் குடும்ப அட்டைதாரர்களுக்கு ,நியாயவிலைக் கடைகளில் வழங்கப்படும் சிறப்பு அத்தியாவசியப் பொருட்களான துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஆகியவற்றை ஜீன்-2024 ஆம் மாதம் பெற தவறிய குடும்ப அட்டைதாரர்கள், ஜீலை-2024 ஆம் மாதத்தில் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.